Breaking news: தமிழகத்தில் ஏப்ரல்- 6ம்தேதி சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Feb 26, 2021, 5:22 PM IST
Highlights

தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். 

தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். 

அப்போது பேசிய அவர்,தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ஆம் தேதி உடன் முடிவடைகிறது.  மே மாதம் 24ம் தேதியுடன் தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது.  கொரோனா தொற்று அச்சத்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகிறோம். sஉமார் 88000 வாக்குச்சாவடிகள் தமிழகத்தொ; அமைக்கப்பட உள்ளன.  ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 18 கோடி. விருப்ப்ம் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தபால் வாக்கு முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். 5 மாநிலங்களி 824 சட்ட மன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18 புள்ளி 68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஒரே கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது  ஏப்ரல் 2ம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மே-2ம் தேதி வாக்கு என்ண்ணப்படும்.  தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்க மார்ச் 12ம் தேதி. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் திரும்பபெற மார்ச் 22ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.  தமிழகம் 234 புதுச்சேரி  முப்பது கேரளா 240 மேற்குவங்கம் 294 அசாம் 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 88 புலி 936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல்.தமிழகத்தில் மொத்தம்88 936 வாசிப்பதில் மையங்கள் அமைக்கப்பட உள்ளன தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஒன்று கூடிய ஒரு லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34. 73 சதவீத அதிக வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நேரம் ஐந்து மாநிலங்களிலும் ஒரு மணி நேரம் அதிகரிப்பு. வீடு வீடாக 5 பேர் மட்டுமே தேர்தல் பரப்புரையில் ஈடுபட நிபந்தனை’’ என அவர் தெரிவித்தார்.

click me!