#BREAKING தமிழக தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம்... தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 26, 2021, 05:14 PM IST
#BREAKING தமிழக தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம்... தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு...!

சுருக்கம்

தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமியக்கப்பட்டுள்ளனர். 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என சுனில் அரோரா அறிவித்துள்ளார். 

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்காளர்களின் பாதுகாப்பிற்கு மிக மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சுனில் அரோரா 5 மாநிலத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் குறித்து அறிவித்தார். 

தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமியக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே. நகர், வேலூர் தொகுதி நேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய சுனில் அரோரா, தமிழகத்தில் அதிக பண புழக்கும் இருக்கும் என்ற காரணத்தால் ஒய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரிகள் மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..