#BREAKING 5 மாநில தேர்தல்: 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு... வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 26, 2021, 04:58 PM ISTUpdated : Feb 26, 2021, 05:00 PM IST
#BREAKING 5 மாநில தேர்தல்: 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு... வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு...!

சுருக்கம்

வாக்காளர்களின் பாதுகாப்பிற்கு மிக மிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுவதாகவும், தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவிற்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். 

தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. இம்மாத இறுதிக்குள் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். 

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும், தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குப்பதிவு மையங்கள்  அமைக்கப்பட உள்ளதாகவும், 5 மாநிலங்களிலும் மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். ஒட்டுமொத்த 5 மாநிலங்களிலும் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரையில் இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

வாக்காளர்களின் பாதுகாப்பிற்கு மிக மிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுவதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவிற்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!