திமுக ஆட்சியில் திட்டம் மட்டுமே அறிவிக்கிறார்கள்.! சிலிண்டர் மானியம் ரூ.100 பற்றி எந்த சத்தமும் இல்லை- தமிழிசை

By Ajmal Khan  |  First Published Jul 11, 2023, 2:26 PM IST

ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழிசை, ஆளுநரின் நடவடிக்கை பிடிக்காவிட்டால் கருத்துக்கள் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை என கூறினார். 


விசாரணை என்றதும் நெஞ்சு வலி

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இவர் நெஞ்சுக்கு நேராக  பீரங்கிகள் வைத்து போரிட்ட போதும் தைரியமா எதிர் கொண்டவர். இன்றைக்கு விசாரணை என்று அனுகியவுடன் ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து விட்டது அவரைப் போல் அழகு முத்து கோல் இல்லையென கூறினார். 

Tap to resize

Latest Videos

ஆளுநருக்கும் அதிகாரம்

ஆளுநருக்கு அந்த பகுதியில் உள்ள நிலைமையை எடுத்து சொல்வதற்கு அதிகாரம் உள்ளது. 50 வருடங்களுக்கு முன்பாக கலைஞர் ஆளுநர் வேண்டாம் என கடிதம் எழுதினார். அரை நூற்றாண்டாக கடிதம் மட்டும் தான் திமுகவினர் எழுத வேண்டும். ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கை பிடிக்காவிட்டால் கருத்துக்கள் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை என விமர்சித்தார். 

சமையல் மானியம் என்ன ஆச்சு.?

புதுச்சேரியில் சமையல் எரிவாயு மானியமாக 300 ரூபாய் கொடுக்க உள்ளதாக அரசாணை வெளியாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் 100 ரூபாய் கொடுக்க உள்ளதாய் கூறினார்கள் இன்னும் அதை பற்றி எந்த சத்தமும் இல்லை.  இத்தனை வருடம் ஆட்சிக்கு வந்த பிறகும் இவர்கள் திட்டங்கள் மட்டும் தான் அறிவிக்கின்றனர்.  மகளிர் உரிமை தொகை தொடர்பாக கருத்து தெரிவித்தவர், தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தது முதல் கணக்கிட்டு மகளிர்களுக்கான உரிமைத்தொகை வழங்க வேண்டும் என தமிழிசை கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

இனிமேல் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது.! எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்

click me!