இனிமேல் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது போர்ஜரி அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வீரர் அழகு முத்துக்கோனுக்கு மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவீரன் அழகு முத்துகோன் இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டவர். அழகு முத்து கோன் வீரத்திற்கு பரிசளிக்கும் வகையில், அவருக்கு சிலை அமைத்தது ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தான் என தெரிவித்தார்.
undefined
டெல்லி செல்லும் எடப்பாடி
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தவர், வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இபிஎஸ் கலந்து கொள்வார் என கூறினார். இன்றைக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி கொடி மற்றும் சின்னம் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் சொந்தமானது என தெரிவித்தார். இனிமேல் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது . அப்படி பயன்படுத்தினால் அது போர்ஜரி ,அதற்காக சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக ஆட்சியில்
கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசுதான். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது கொரோனா பரவியதால் நீதிமன்றத்தில் ஓராண்டு வழக்கு விசாரணை தடைப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை நடந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து இப்போது கோடநாடு வழக்கை விசாரிக்கிறது. அதிமுகவுக்கு இருக்கக்கூடிய ஒரே கேள்வி கோடநாடு குற்றவாளிகளை திமுக வழக்கறிஞர்கள் ஜாமினில் எடுத்தது ஏன் என்பது தான் என ஜெயக்குமார் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்