தமிழகத்தில் உயர்கிறது மின் கட்டணம்.. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? இதோ முழு விவரம்.!

By vinoth kumar  |  First Published Jul 19, 2022, 6:40 AM IST

தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் மின்துறையில் கடன் உயர்ந்துள்ள காரணத்தாலும் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு வலியுறுத்தியதாலும் மின்கட்டணங்களை உயர்த்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அந்த ஸ்கூல ரெடி பண்ண இன்னும் 2 மாசம் ஆகும்! அதுவரை அங்கு பயின்ற மாணவர்களை இங்கு தான் படிக்க வைக்கனும்!

42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம். இருந்தாலும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

இதையும் படிங்க;- தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது... 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் மின் கட்டணம்!!

200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும். 201- 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாததம் ஒன்றிற்கு ரூ.147.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மாததம் ஒன்றிற்கு ரூ.297.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.155 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 

முழு விவரம்:

 

click me!