மாப்பிள்ளை அவர்தான் ஆனால் சட்டை என்னோடது.. ஒலிம்பியாட்டில் ஸ்டாலின் கதை இதுதான்.. செமயா கலாய்த்த அண்ணாமலை.

By Ezhilarasan Babu  |  First Published Jul 18, 2022, 9:15 PM IST

ஒலிம்பியாட் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் செயல் " மாப்பிள்ளை அவர்தான் ஆனால் சட்ட என்னோடது"  என்பது போல உள்ளது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 


ஒலிம்பியாட் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் செயல் " மாப்பிள்ளை அவர்தான் ஆனால் சட்ட என்னோடது"  என்பது போல உள்ளது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஒலிம்பியாட் செஸ் போட்டியை தமிழகத்திற்கு கொண்டு வந்த பிரதமர் மோடி என்றும் ஆனால் ஸ்டாலின் அதை வைத்து விளம்பரம் தேடிக் கொள்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். பல்லடத்தில் நடைபெற்ற தாமரை மாநாட்டில் அண்ணாமலை இவ்வாறு பேசினார்.

மத்திய அரசு ஆட்சி பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதன் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் தாமரை மாநாடு என்ற பெயரில் பல்லடம் கரையான் புதூரில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி னார். மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் அவர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று  பல்லடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:-  மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன, திருப்பூர் மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ கல்லூரி அமைக்க பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. இங்கு இந்தாண்டு 96  மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். கடுமையான பஞ்சு விலை ஏற்றத்தால் நூல் விலையை குறைக்கும் பொருட்டு  மத்திய அரசு நூல் இறக்குமதி விலையை ரத்து செய்ததை தொடர்ந்து நூல் விலை கிலோ 40 ரூபாய் குறைந்துள்ளது என்றார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது... 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் மின் கட்டணம்!!

மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழகத்தில் 15 இலட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை கூறினார். மொத்தத்தில் கடந்த 67 ஆண்டுகளில் வெறும் 5 கோடியே 50 லட்சம் கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்டது, ஆனால் பாஜக ஆட்சி கொண்டு எட்டு ஆண்டுகளில் 11 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது என்றார். அதேபோல்  கறிக்கோழி பிரச்சினையில் கோழி வளர்ப்பவர்கள் முகவர்களிடையே  தமிழக அரசு 15 நாட்களுக்குள் பேசி தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் கோட்டையை வரவும் பாஜக தயங்காது என எச்சரித்தார். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ள உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது,

அந்த  போட்டியை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் பிரதமர் மோடிதான் ஆனால் அதை வைத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்பது போல செயல்படுகிறார். பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் கடந்த 8 ஆண்டுகளில் எந்த இடத்திலும் குண்டு வெடிக்கவில்லை, அதன் அளவுக்கு நாடு பாதுகாப்பாக உள்ளது, நமது நாட்டில் சண்டிகர், புனே போன்ற சின்ன மாவட்டங்கள் கூட பெரிய வளர்ச்சியை கண்டுள்ளன, ஆனால் தமிழகத்தை மேலும் வளர்க்க வேண்டும் என மோடி கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். 
 

click me!