இந்த குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்குங்கள்... வேல்முருகன் பரபரப்பு கருத்து!!

Published : Jul 18, 2022, 06:49 PM IST
இந்த குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்குங்கள்... வேல்முருகன் பரபரப்பு கருத்து!!

சுருக்கம்

பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியூர் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மாணவி ஒருவர் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள் உட்பட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கு எல்லாம் தீவைத்து, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஒரே பள்ளியில் நிகழ்ந்த 5 மரணங்கள்.. சுவரில் இருந்தது ரத்தக்கறை இல்லை பெயிண்ட்..? சர்ச்சையாகும் சக்தி பள்ளி

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு காரணமாக யார இருந்தாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருக்கிறார் என்றால், அவரது உடம்பில் எப்படி கீறல் இருக்கும்? மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக விசாரணை செய்யவில்லையா? மாணவர்களை முன்கூட்டியே பள்ளிக்கு வர வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் என்ன? அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்டோர் ஆய்வு செய்ததை வரவேற்கிறேன்.

இதையும் படிங்க: மீண்டும் வன்முறை வெடிக்கலாம்.. அரசு மிரட்டலுக்கு அஞ்ச கூடாது. கம்யூனிஸ்ட் கட்சி பரபரப்பு..

ஆனால் மூன்று நாட்களாக விசாரிக்காமல் இருந்தத்தற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கு காரணமா? அரசு அதிகாரிகள் ஒரு சில பேர் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு உடந்தையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வரை சந்திக்க இருக்கிறேன். இறந்த பெண்ணிற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த பெண்ணின் தாய்க்கு அரசு வேலை அளிக்க வேண்டும். பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும். இதுபோன்ற பள்ளி நிர்வாகத்தை அரசுஇரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!