புதிய கட்சியை தொடங்கும் சசிகலா? பதறும் இபிஎஸ் - ஓபிஎஸ்.. அதிமுக என்னவாகும்?

By Raghupati RFirst Published Jul 18, 2022, 5:23 PM IST
Highlights

சசிகலா தற்போது புதிதாக கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற வகையில் நீதிமன்றம் வரை சென்று அதனை முறியடித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டது என்றும் அறிவித்தனர்.

அடுத்து நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தரப்பு அப்செட்டாக ஆகியுள்ளது. தமிழகம் முழுக்க சசிகலா தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போரூர் நான்கு சாலை பகுதியில் சசிகலா வேனில் இருந்தபடி தொண்டர்கள் மத்தியில் பேசினார். 

மேலும் செய்திகளுக்கு..3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. மக்களே உஷார் !

அப்போது, ‘அதிமுக கடைக்கோடி தொண்டர்களின் நம்பிக்கையை பெற்ற இயக்கமாகவும், ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்வுக்காக போராடி வந்த இயக்கமாகவும், நம் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்திருக்கிறது. நம் புரட்சிதலைவர் அவர்கள் மிகவும் கண்ணியத்தோடு அனைவரையும் அரவணைத்து, ஒருவர் கூட நம் இயக்கத்தை விட்டு சென்று விட கூடாது என்று நினைத்து, மிகவும் பெருந்தன்மையோடு இந்த இயக்கத்தை கொண்டு சென்றார்கள். அதே வழியை பின்பற்றி தான் நம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள்.

இது போன்ற நிகழ்வுகளில் எனது பங்கும் இருந்துள்ளதால், இவற்றுக்கெல்லாம் நானே சாட்சியாக இப்போது நின்று கொண்டு இருக்கிறேன். முன்னோடிகளை நீக்குவதும், எந்தவித காரணமும் இல்லாமல் தன்னை துதி பாட மறுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக உண்மையாக கட்சிக்கு உழைத்தவர்களை நீக்குவதும், எல்லாவற்றையும் விட ஒரு மிகப் பெரிய கொடுமையாக நம் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை நீக்கியதும் யாராலும் மன்னிக்க முடியாதது. ஒரு சிலரின் சுய நலத்தால் தன்னிச்சையாக செயல்பட்டது தான் நம் இயக்கத்தின் இன்றைய நிலைக்கு காரணம் என்று ஒவ்வொரு தொண்டரும் வேதனைப் படுகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை

அதிமுக தனக்கென்று இருந்த தன்னிகரில்லா அடையாளத்தை தொலைத்து நிற்பதை எந்த தொண்டரும் விரும்பவில்லை. ஒருவர் நம் இயக்கத்தை சீரழிக்க காத்துக் கொண்டு இருக்கிறார். அவரோ ஜெயலலிதாவால் ஒரே நாளில் மூன்று முறை அறிவிப்பு கொடுத்து தனது பதவிகளையும், பொறுப்புகளையும் இழந்த பெருமைக்குரியவர்.  இவர் போன்றோர் திமுகவினரின் கட்டளையை ஏற்று அதன்படி நம் இயக்கத்தை கொண்டு செல்ல நினைக்கிறார்கள்.

இதற்கு கழக மூத்த நிர்வாகியின் ஆடியோவே சாட்சியாக இருக்கிறது’ என்று கூறினார். வழக்கமாக கட்சித் தொண்டர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கொடிகளை பயன்படுத்தி வந்த நிலையில் நேற்று புதிதாக எம்ஜிஆர் அம்மா மற்றும் சசிகலா ஆகியோரின் புகைப்படத்தை கொண்ட புதிய கொடியினை பயன்படுத்தினர். இதனால் இந்த புதிய கொடி அரசியல் விமர்சகர் மத்தியில் பேசும் பொருளாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சசிகலா தரப்பில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுமா ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மச்சி சைட்டிஷ் வாங்கிட்டு வா.. மது போதையில் நண்பனை போட்டு தள்ளிய நண்பர்கள்.!

click me!