அக்டோபர் 17ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.. வெளியானது அறிவிப்பு !

By Raghupati RFirst Published Oct 7, 2022, 6:00 PM IST
Highlights

தமிழகத்தில் வருகின்ற 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைப்பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் கூறினார். இந்த கூட்டத்தொடரின்போது, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு தடைக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க..மகளிர் விரும்பினால் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்கலாம்.. வாய்மொழி உத்தரவு உண்மையா ?

click me!