வேலைகேட்டு போராட்டங்கள் நடக்கும் நிலையில்.. 82 கோடியில் பேனா சின்னம் தேவையா.. திமுகவை அலறவிடும் கரு.நாகராஜன்

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2022, 4:16 PM IST
Highlights

மெரினாவில் பேனா சின்னம் வைக்க 84 கோடி ரூபாய் செலவு செய்யும் இந்த அரசு, வேலையில்லாமல் திண்டாடுபவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்க கூடாதா என பாஜக மாநில துணைத்தலைவர் கரு .நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

மெரினாவில் பேனா சின்னம் வைக்க 84 கோடி ரூபாய் செலவு செய்யும் இந்த அரசு, வேலையில்லாமல் திண்டாடுபவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்க கூடாதா என பாஜக மாநில துணைத்தலைவர் கரு .நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாடு அனைத்து அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரியில் பணியாற்றி வந்த விரிவுரையாளர்கள் 1311 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப பயிற்சி இயக்குனரகத்தில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் சந்தித்து  ஆதரவு தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது கூறிய அவர், தேர்தலுக்கு முன்பு அடுக்கடுக்கான வாக்குறுதிகளை கொடுத்த திராவிட மாடல் அரசு ஏன் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அந்த வாக்குறுதிகளை திராவிட அரசால் நிறைவேற்ற முடியாதா? சட்ட புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு போராட்டம் செய்வது போல, பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மக்கள் நல பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை,

இதையும் படியுங்கள்:  வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் தான் இந்து..!கமல்ஹாசனின் கருத்து 100க்கு 100 சரியானது..! கி.வீரமணி

நான்கு முறை  தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களை மறுபடியும் தேர்ச்சி பெற வேண்டும் என  கூறுவது அநியாயம்,  84 கோடியில் மெரினாவில் பேனா சின்னம் வைக்கிறேன் என கூறும் அரசு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் இதுபோன்றவர்களுக்கு  ஒதுக்க முடியாதா என கேள்வி எழுப்பினார். டாக்டர், எஞ்சினியர்களை உருவாக்குவது ஆசிரியர்கள்தான், ஆனால் அப்படிப்பட்ட ஆசிரியர்கள் இப்போது தரையில் அமர்ந்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு ஏன் நிறைவேற்ற மறுக்கிறது என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சொன்னதைச் செய்ய திமுக விரும்பவில்லை என அவர் கூறினார் .
 

click me!