2வது முறையாக திமுக தலைவராகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..?? அண்ணா அறிவாலயத்தில் இன்று வேட்புமனு.

Published : Oct 07, 2022, 03:37 PM ISTUpdated : Oct 07, 2022, 05:53 PM IST
 2வது முறையாக திமுக தலைவராகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..?? அண்ணா அறிவாலயத்தில் இன்று வேட்புமனு.

சுருக்கம்

திமுக தலைவர் பதவிக்கு தமிழக முதலமைச்சர், தற்போதைய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.  

திமுக தலைவர் பதவிக்கு தமிழக முதலமைச்சர், தற்போதைய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு 15வது உட்கட்சி தேர்தல் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஒன்றிய கிளைகழக பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. முன்னதாக திமுக உயர் நிலையிலுள்ள தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் தான் இந்து..!கமல்ஹாசனின் கருத்து 100க்கு 100 சரியானது..! கி.வீரமணி

இந்நிலையில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதற்காக திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். அறிவாலையம் வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கு இரண்டாம் முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதையும் படியுங்கள்: ஆசிரியர் பணிக்கு தினக்கூலியை விட மிகவும் குறைவான ஊதியம்.. வெறும் ரூ.166 மட்டுமே.. தமிழக அரசை அலறவிடும் ராமதாஸ்

மனு தாக்கல் செய்ய வந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அக்காட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல திமுக தலைவராக மு.க ஸ்டாலின் வர வேண்டும் என்பதற்காக பலரும் அவரின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் வரவேண்டுமென பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் நிர்வாகிகள் மேளதாளத்துடன் வந்து  விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தலைவர் பதிவிக்கு முதல்வர் ஸ்டாலினையோ, அல்லது பொதுச் செயலாளர் துரைமுருகனையை பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலுவையோ எதிர்த்து இதுவரை யாரும் வேட்பு மணு தாக்கல் செய்யவில்லை, எனவே இவர்கள் மூவரும் போட்டியின்றி அப்பதவிகளுக்கு தேர்வாகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின், இதன் மூதல் கட்சியின் தலைவராக இரண்டாவது முறையாக போட்டி இன்று தேர்வாக உள்ளார். இதேபோல் பொதுச் செயலாளராக துரைமுருகனும் மற்றும் பொருளாளராக டி. ஆர் பாலுவுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் அவர்களும் பேட்டோயின்றி தேர்வாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!