நீதிமன்ற தீர்ப்பை மறந்துவிடாதீங்க.. டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்க பாஜக கடும் எதிர்ப்பு..!

By vinoth kumarFirst Published Nov 23, 2022, 7:31 AM IST
Highlights

 தமிழக பள்ளி கல்வி துறை அலுவலகங்கள் இயங்கும் கல்லூரி சாலையில், டிபிஐ வளாகத்தில் முன்னாள் கல்வி அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான அன்பழகன் அவர்களுக்கு சிலை நிறுவும் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை டிபிஐ வளாகத்தில் ததிமுக மூத்த தலைவர் அன்பழகனுக்கு சிலை அமைக்கும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக பள்ளி கல்வி துறை அலுவலகங்கள் இயங்கும் கல்லூரி சாலையில், டிபிஐ வளாகத்தில் முன்னாள் கல்வி அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான அன்பழகன் அவர்களுக்கு சிலை நிறுவும் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "2013 உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் பொது இடங்களில் எந்த சிலை நிறுவவும் தமிழக அரசு  அனுமதியளிக்கவில்லை" என்று கடந்த 23/01.2022 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றில் தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் தமிழக அரசின் சார்பில் வாக்குமூலத்தை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;- வெட்க கெட்ட காங்கிரஸ்.. பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை! போட்டு தாக்கும் பாஜக.!

"சாலைகளிலோ, நடைபாதைகளிலோ, பொது மக்களின்  பயன்பாட்டில் உள்ள பொது இடங்களிலோ இனி சிலைகள் வைப்பதற்கு மாநிலங்கள் அனுமதியளிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஜனவரி 18, 2013 அன்று அளித்த  தீர்ப்பின் படி, அரசு அலுவலகங்கள் பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள இடங்கள் என்பதை உணர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கல்வி துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் அவர்களின் சிலையை நிறுவும் முயற்சியினை தமிழக அரசு கைவிட வேண்டும். 

மேலும், அக்டோபர் 7,2021 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் எம்.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கிய தீர்ப்பில், பொது இடங்கள், சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் இனி சிலைகள் அமைக்க அனுமதியளிக்கக்கூடாது என்று உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டதை அரசு மறந்து விடக்கூடாது. இனி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் சிலைகள் வைப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

இதையும் படிங்க;-  கழுவி கழுவி ஊற்றி விட்டு.. பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்தவர் கோமாளியா? உத்தமன் அண்ணாமலை கோமாளியா? BJP

மேலும், அதே தீரப்பில், பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு 'தலைவர்களின் பூங்கா' ஒன்றை உருவாக்கி அங்கே தலைவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்ற உத்தரவையும் செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

click me!