பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது மீண்டும் நிரூபணம்.. காயத்ரிக்கு ஆதரவாக ஜோதிமணி..!

By vinoth kumar  |  First Published Nov 23, 2022, 6:51 AM IST

ஆர்எஸ்எஸ் /பாஜக சித்தாந்தம் அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை வெட்கமற்று ஆதரிப்பது, பாதுகாப்பது. பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் பாதுகாத்ததாக வரலாறு கிடையாது.


பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என  கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறியுள்ளார். 

பாஜக நிர்வாகிகள் சூர்யா சிவா- டெய்ஸி சரண் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் ஆபாசமாக பேசிக் கொள்ளும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் . வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவர் 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என ஜோதிமணி கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உடனே காயத்ரி ரகுராம் போட்ட ட்வீட் என்ன தெரியுமா?

இதுகுறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆர்எஸ்எஸ் /பாஜக சித்தாந்தம் அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை வெட்கமற்று ஆதரிப்பது, பாதுகாப்பது. பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் பாதுகாத்ததாக வரலாறு கிடையாது.

பாஜகவின் ராகவன், பாஜகவைச் சார்ந்த பெண்ணிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டதை விசாரிக்க பாஜக ஒரு கமிட்டி அமைத்தது. அது என்ன ஆனது? அந்த அறுவெறுக்கத்தக்க செயலை வெளிக்கொண்டு வந்தவர்கள்தான்  பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர். ராகவன் அல்ல.

பாஜகவின் ராகவன் ,பாஜகவைச் சார்ந்த பெண்ணிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டதை விசாரிக்க பாஜக ஒரு கமிட்டி அமைத்தது. அது என்ன ஆனது? அந்த அறுவெறுக்கத்தக்க செயலை வெளிக்கொண்டு வந்தவர்கள்தான் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர். ராகவன் அல்ல.

— Jothimani (@jothims)

 

இன்றும் பாஜகவைச் சேர்ந்த சகோதரி  பாஜகவின் மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.  காசு கொடுத்து சமூக ஊடகங்களில் லைக்குகள் வாங்குவதை அம்பலப்படுத்தியுள்ளார். இதனால் அவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- குற்றவாளிகளை கொண்டாட கூடாது.. எழுவர் விடுதலை குறித்து பாஜகவை சீண்டிய எம்.பி ஜோதிமணி

click me!