12 மணி நேர வேலை.! இறங்கி அடிக்கும் கூட்டணி கட்சிகள்- மசோதாவை பின்வாங்குகிறதா திமுக அரசு.?

By Ajmal Khan  |  First Published Apr 24, 2023, 11:32 AM IST

தொழிற்சாலையில் 12 மணி நேர வேலைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு தேதி குறித்த நிலையில், மசோதாவை தமிழக அரசு நிறுத்தி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


12 மணி நேர வேலை- சட்டம் நிறைவேறியது

தொழிலாளர்களின் பணி நேரம் 8  மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படுவது தொடர்பான  சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. , இந்த சட்ட மசோதா தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் தொழிலாளர்கள் பயனடைய மாட்டார்கள் எனவும் கூட்டணி கட்சிகள் தெரிவித்து இருந்தன. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு,  ஒரு வாரத்தில் 48 மணி நேரத்தை நான்கு நாட்களில் முடித்த பிறகு மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.  12 மணி நேரம் வேலை என்பது யார் வேண்டுமோ அவர்கள்தான் இதை பயன்படுத்தலாம். எல்லோருக்கும் இல்லையென தெரிவிக்கப்பட்டது.

Latest Videos

undefined

தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்வு! சட்டப்பேரவையில் நிறைவேறிய மசோதா-வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்

 திமுக கூட்டணி கட்சி எதிர்ப்பு

தன்னார்வத்தின் அடிப்படையில் பணி செய்கிறோம் என்று தெரிவித்து வார விடுப்பு 3 நாட்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தால் மட்டுமே 12 மணி நேர வேலை அனுமதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இருந்த போதும் இதனை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்துள்ளது. 12 மணி நேர வேலை மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். சட்டம் நிறைவேற்றிய பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேசுவதில் என்ன பொருள் இருக்கிறது. கூடுதல் ஊதியம் வழங்குவதை தடுக்கவே 12 மணி நேர வேலை, 12 மணி நேர வேலை என்பது ஒன்றரை நாள் பணி செய்வதற்கு சமம், 4 நாள் தூக்கத்தை 3 நாள் விடுமுறையில் ஈடு செய்வது எப்படி? எனவும் கேள்வி எழுப்பினர். இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளநிலையில்,

தமிழக அரசு ஆலோசனை

தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா,மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தொழிற்சங்கங்களின் கருத்துகளை கேட்ட பிறகு தமிழக முதலமைச்சர் இந்த சட்ட மசோதாவை நிறுத்தி வைக்கலாமா அல்லது செயல்படுத்தலாமா என்பது குறித்து முக்கிய முடிவை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

12 மணிநேர வேலை மசோதாவை எதிர்த்து ஸ்ட்ரைக்! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
 

click me!