கொரோனாவுடன் மல்லுக்கட்டும் முதல்வர்... ஒட்டுமொத்தமாக ஒழிக்க எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Jun 18, 2020, 4:17 PM IST
Highlights

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மேலும், பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பும் இல்லாததால் தடுக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர். 

நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும், மாவட்டங்களும் விபரம் வருமாறு:

1. அரியலூர் - சரவண வேல்ராஜ்
2. பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்
3. கோயம்பத்தூர் - ஹர்மந்தர் சிங்
4. நீலகிரி - சுப்ரியா சாஹு
5. கடலூர் - கஹந்தீப் சிங் பேடி
6. தர்மபுரி - சந்தோஷ் பாபு
7. திண்டுக்கல் - மங்கத்ராம் ஷர்மா
8. ஈரோடு - காகர்லா உஷா
9. கன்னியா குமரி - ஜோதி நிர்மலா சாமி
10. கரூர்- விஜயகுமார்
11. திருச்சி - ரீத்தா ஹரீஷ் தாக்கர்
12. கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்
13. மதுரை - தர்மேந்திர பிரதாப் யாதவ்
14. புதுக்கோட்டை - ஷாம்பு கல்லோலிகர்
15. தஞ்சாவூர் - பிரதீப் யாதவ்
16. நாமக்கல் - தயானந்த் கட்டாரியா
17. சேலம் - நஸிம்முதன்
18. விருதுநகர் - மதுமதி
19. தூத்துக்குடி - குமார் ஜெயந்த்
20. நாகப்பட்டினம் -- முனியநாதன்
21. ராமநாதபுரம் - சந்திர மோகன்
22. சிவகங்கை - மஹேஷ் காசிராஜன்
23. திருவாரூர் - மணிவாசன்
24. தேனி - கார்த்திக்
25. திருவண்ணாமலை - தீரஜ்குமார்
26. நெல்லை - அபூர்வா
27. திருப்பூர் - கோபால்
28. வேலூர் - ராஜேஷ் லக்கானி
29- விழுப்புரம் - முருகானந்தம்
30. கள்ளக்குறிச்சி - நாகராஜன்
31. தென்காசி - அனுஜார்ஜ்
32. திருப்பத்தூர் - ஜவஹர்
33. ராணிப்பேட்டை - லட்சுமி பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே  செங்கல்பட்டுக்கு முதன்மைச் செயலர் உதயச்சந்திரனும், காஞ்சிபுரத்திற்கு சுப்ரமணியன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சென்னைக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு அதிகாரி மற்றும் மண்டல வாரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

click me!