நேர்முக உதவியாளருக்கு கொரோனா... அதிர்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

By vinoth kumarFirst Published Jun 18, 2020, 3:20 PM IST
Highlights

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50,193ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35,521ஆகவும்,  அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 576ஆக உள்ளது.

இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் ரவிச்சந்திரன் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஞாயிறு அன்று சென்னையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இந்நிலையில், சென்னையில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் காரில் திருச்சி வந்து கொண்டிருந்தார். 

அப்போது ரவிச்சந்திரனை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறையினர் தகவல் கொடுத்து உடனடியாக திருச்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து தற்போது அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேர்முக உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்ச்சியடைந்துள்ளார். 

click me!