அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது... தங்க தமிழ்செல்வன் தடாலடி..!

Published : Jun 18, 2020, 02:43 PM IST
அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது... தங்க தமிழ்செல்வன் தடாலடி..!

சுருக்கம்

அதிமுக ஆட்சியை இன்னும் 8 மாசம் வேணா மேல இருக்கிறவங்க காப்பாத்தலாம். அதுக்குப்பிறகு இவங்கள ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.  

அதிமுக ஆட்சியை இன்னும் 8 மாசம் வேணா மேல இருக்கிறவங்க காப்பாத்தலாம். அதுக்குப்பிறகு இவங்கள ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், ‘’11 எம்எல்ஏ பதவிப் பறிப்பு ஊரறிய, உலகறிய நடந்த ஜனநாயகப் படுகொலை அது. நாங்க கொறடா உத்தரவை மீறல, சபாநாயகர் கட்டளையை மீறல, ஆட்சிக்கு எதிரா ஓட்டும் போடல. ஆனா, 18 எம்எல்ஏக்களின் பதவியைக் காலி பண்ணுனாங்க. எல்லாத் தப்பையும் செஞ்ச பன்னீர்செல்வமும், அவரோட அணியினரும் ஆளுங்கட்சியாக வலம் வந்துகிட்டு இருக்காங்க. ரெக்கார்டு பூர்வமா அவங்க சிக்கியிருக்காங்க. சட்டப்படி, நியாயப்படி, தர்மப்படி பார்த்தா அவங்க பதவிதான் பறிக்கப்பட்டிருக்கணும். அதைத் தப்புன்னு சொல்றதுக்கு நம்ம நீதிமன்றங்களுக்கு என்ன தயக்கம்னு தெரியல. சம்பவம் நடந்தது 2017 பிப்ரவரியில. இன்னைக்கு 2020 ஜூன். வழக்கு போகுது போகுது... போய்க்கிட்டே இருக்குது.

இந்த வழக்கு மறுபடியும் உச்ச நீதிமன்றத்துக்கு வருதுன்னு தெரிஞ்ச பிறகு அவசர அவசரமா இந்த நாடகத்தை அரங்கேற்றம் பண்ணியிருக்காங்க. பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் அனுப்புன கடிதத்தை சபாநாயகர் எனக்கு அனுப்பி வெச்சிருக்காரு. அதுல பழனிசாமி என்ன சொல்லியிருக்காருன்னா, 'நாங்க ஒரு தனி அணியா செயல்பட்டோம், அவர் தனி அணியாச் செயல்பட்டாரு. இப்ப தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரிச்சிடுச்சி'ன்னு சொல்லியிருக்காரு. ஓட்டுப்போட்டது எப்ப, தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டது எப்ப? அதுவும் தேர்தல் ஆணையம் அங்கீகரிச்சது இவங்க சேர்ந்ததைத்தானே தவிர, எதிர்த்து ஓட்டுப்போட்டதை அல்ல. அதனாலதான் அவங்க அரசியல் அமைப்புச் சட்டத்தையே ஏமாத்திட்டாங்க, ஃபிராடு பண்ணிட்டாங்கன்னு சொல்றோம்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10-வது ஷெட்யூல்ல, என்ன சொல்லிருக்கு என்றால் கொறடாதான் உத்தரவு போடணும்னு இல்ல. ஒரு டைரக்ஷன் இருந்தாப் போதும்னுதான் இருக்குது. கொறடாதான் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராத் தேர்ந்தெடுத்திட்டோம். அவர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வாராரு.

அதாவது, அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் அவருக்கு ஓட்டுப்போடணும்கிறதுதான் கட்சியோட டைரக்ஷன். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 பேரும் ரெட்டை இலையில நின்னு ஜெயிச்சவங்க. அதே ரெட்டை இலை சின்னத்துல ஜெயிச்ச எடப்பாடி பழனிசாமியைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கோம்னு கட்சியில இருந்து ஒரு டைரக்‌ஷன் வந்த பிறகு, திமுகவுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டது ஓபிஎஸ் ஆட்கள்தான். அவங்கள 15 நாட்களுக்குள்ள தகுதி நீக்கம் செஞ்சிருக்கணும். இதை நாங்க சொன்னோம். ஆனா, எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் இப்ப ஒரு கடிதம் எழுதி, அதை எங்களுக்கு அனுப்பி வெச்சிருக்காரு சபாநாயகர்.

இனியும் இந்த வழக்குல நல்ல தீர்ப்பு வரலைன்னா, ஜனநாயகம் தோத்துப்போச்சு, நியாயம் செத்துப்போச்சுன்னு அர்த்தம். அவ்வளவுதான் என்னோட கருத்து. தமிழ்நாடு முழுக்கப் பொதுமுடக்கம் இருந்தப்ப, சென்னையில உள் முடக்கம் போட்டது மகா முட்டாள்தனம். அதுவும் தமிழ்நாடு முழுக்க எல்லாச் சந்தையையும் மூடிட்டு, ஆசியாவுலேயே பெரிய சந்தைன்னு சொல்ற கோயம்பேடு மார்க்கெட்டைத் திறந்தாங்க பாருங்க. படிக்காதவன் கூட இந்த வேலையச் செய்ய மாட்டான். சந்தையில மூட்டை தூக்குற ஒருத்தரக் கூப்பிட்டு, கருத்துக் கேட்டிருந்தாக்கூட, சார் அப்படிச் செய்யாதீகன்னு சொல்லியிருப்பாரு. ஆனா, துணை முதல்வரு, ஐஏஎஸ் அதிகாரிங்க எல்லாம் சேர்ந்து இப்படியொரு காரியத்தைப் பண்ணி, இன்னைக்கு தினமும் 30, 40 பேர் சாவற அளவுக்குக் கொண்டு போயிட்டாங்க.

சென்னையில இருந்து இ - பாஸ் எடுக்காம பைக் லாரியில மட்டும் 40 ஆயிரம் பேரு தென் மாவட்டங்களுக்கு வந்திருக்காங்களாம். அவங்க எத்தனை பேருக்குப் பரப்புனாங்கன்னு கணக்கு இல்ல. இந்த அரசாங்கம் மொத்தமாத் தோத்துப்போச்சு.

கரோனாவை கட்டுப்படுத்துறதவிட, அதை எப்படி மறைக்கலாம், கரோனாவுல ஏதாவது கொள்ளையடிக்க முடியுமான்னுதான் மொத்தக் கூட்டமும் திரியுது. மக்கள் கோவமா இருக்காங்க. இந்த ஆட்சியை இன்னும் 8 மாசம் வேணா மேல இருக்கிறவங்க காப்பாத்தலாம். அதுக்குப்பிறகு இவங்கள ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது’’என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?