
மோடி குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கணவனை இழந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு; காதலி வீட்டில் இளைஞன் தற்கொலை
இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி அரியலூர், நீலகிரி, திண்டுக்கல், செங்கோட்டை, சேலம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இளைஞரை அடித்து கொன்று மண்ணில் புதைத்த மர்ம நபர்கள்; காவல்துறை விசாரணை
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது குறித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.