திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவினரின் சொத்து பட்டியலையும் வெளியிடப் போவதாக கூறி அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று, திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து விவரங்களை வெளியிட்டார்.
அதன்படி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் மற்றும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரின் சொத்து விவரங்கள் அடங்கிய வீடியோபை சென்னை கமலாலயத்தில் இருந்து ஒளிபரப்பு செய்தார்.
அத்துடன் தனது ரபேல் வாட்ச்சின் ரசீதையும் ( Bill) அவர் வெளியிட்டார். அடுத்தடுத்து திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடப் போவதாக தெரிவித்து இருக்கும் அண்ணாமலை, அதிமுகவினரின் சொத்து பட்டியலையும் வெளியிடப் போவதாக சொல்லி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அண்ணாமலைக்கு அதிரடியான பதிலடியை கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “ஊழலிலே திளைத்த கட்சி திமுக என்று உலகத்திற்கே தெரியும். திமுகவிற்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக. 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திமுகவினர் சொத்து பட்டியலை அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த 1 லட்சத்து 34 கோடி ரூபாயை 100 ரூபாயாக அடுக்கினால் நிலவிற்கு கால்வாசி தூரம் சென்று விடலாம். அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது ஒரு நல்ல விஷயம். ஆனால் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அந்த சொத்துகள் அனைத்தையும் முடக்கி அரசுடமையாக்க அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவேன் என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தாலும் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. அதிமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும். அதன் பின்னர் எங்களுடைய ரியாக்ஷனை நீங்கள் பார்ப்பீர்கள். அதிமுகவினரில் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
இதையும் படிங்க..19 வயசு தான் ஆகுது.. கல்லூரியில் கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்
மேலும் அதிமுகவினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பிப்பது மிரட்டல் விடுத்தால் எல்லாம் அது எங்களிடம் பலிக்காது. விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் திமுகவை மிஞ்ச யாரும் இல்லை. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு தமிழ்நாடே சந்தி சிரிக்கும் அளவிற்கு உள்ளது. 24 மணி நேரம் செயல்பட்டு வருகின்ற காவல் துறை அடிவாங்கும் துறையாக மாறி உள்ளது. ஒவ்வொரு காவலர்களும் இன்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றனர். காவல்துறையை சேர்ந்த ஒருவர் என் வேலை போனாலும் பரவாயில்லை.
என் குழந்தையின் கால் போய் விட்டது, யார் மேலும் நடவடிக்கை என்று போராடுகிறார். இந்த இரண்டு வருடங்களில் காவலர்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சட்டத்தை கையில் எடுத்து சட்ட விரோத செயல்களை செய்து வருகிறது. காவல் துறை நிலைமை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது. காவல் துறைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜெயக்குமார்.
இதையும் படிங்க..சத்தமே இல்லாமல் அப்டேட்டை கொடுத்த பொன்னியின் செல்வன் 2 படக்குழு.. அடேங்கப்பா இப்படியொரு அப்டேட்டா