
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு பாராட்டுக்கள் எனவும் உங்களின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் 182 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி, தொடர்ச்சியாக 6-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 77 இடங்களை கைப்பற்றியது.
முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் தொடர்வார்கள் என பாஜக அறிவித்தது.
உடனடியாக கடந்த 23ம் தேதி மாநில பாஜ தலைவர்கள் அம்மாநில ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆளுநரின் அனுமதியைத் தொடர்ந்து, விஜய் ரூபானி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்று கொண்டது.
இதற்கான பதவியேற்பு விழா, காந்தி நகரில் உள்ள தலைமைச் செயலகத்தின் அருகே திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், குஜராத்தில் 2-வது முறையாக விஜய் ரூபானி முதல்வரானார். அதேபோல் துணை முதல்வராக நிதின் படேல் பதவி ஏற்றார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு பாராட்டுக்கள் எனவும் உங்களின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.