ஸ்டாலின் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம்... மருதுகணேஷ் வெளியிட்ட பரபரப்பு தகவல்...

 
Published : Dec 26, 2017, 04:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
ஸ்டாலின் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம்... மருதுகணேஷ் வெளியிட்ட பரபரப்பு தகவல்...

சுருக்கம்

Reson behind MK Stalin chooses Maruthu ganesh as RK nagar candidate

ஆம் இந்த மருது கணேஷ் பணத்தளவில் மூன்றாமிடம் கூட அல்ல அதற்கும் கீழானவன்தான். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு பற்றி உருகவைக்கும் மருது கணேஷ்.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர்  இந்த இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்து விட்டது என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள், இங்கே சில முக்கிய விடயங்களை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆர்.கே நகர் தேர்தலில் தினகரனும் இபிஎஸ்  ஓபிஎஸ்  அணியில் மதுசூதனனும் போட்டி இடுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். மேலும் அவர்கள் இருவரும் தாங்கள் வெற்றி பெற ஓட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வாந்தவுடன் நடந்த கருத்துகணிப்பு திமுகவிற்கு சாதகமாகவும் நாள் ஆக ஆக எந்த அளவு பணம் இரக்கப்படுதோ அதற்கு ஏற்றார் போல் முதலில் அதிமுக விற்கு சாதகமானது ஆனால் தேர்தலுக்கு மூன்று தினங்களுக்கு முன் ராஜநாயகம் என்பவர் வெளியிட்ட கருத்து கணிப்பு முற்றிலும் தினகரனுக்கு சாதகமாக இருந்தது. அதாவது அந்த சமயத்தில் தான் தினகரன் தன் திறமைகளை காட்டி

பணப்பட்டுவாடா விசயங்களை முடித்திருந்தார்.

ஆர்.கே நகர் மக்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள் அதனால் ஒரே சமயத்தில் ஒரு நபருக்கு ரூ.10000 என்பதும் ஒரு குடும்பத்திற்கு ரூபாய்.20000 முதல் ரூபாய். 50000 என்பதும் சாதாரண தொகையில்லை இதனால் மக்கள் இந்த முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

மேலும் அந்த கருத்து கணிப்பில் தகுதியான வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு தினகரன் முதலிடம் மதுசூதனன் இரண்டாமிடம் மருது கணேஷ் முன்றாமிடம் என்று உள்ளது.

ஆம் இந்த மருது கணேஷ் பணத்தளவில் மூன்றாமிடம் கூட அல்ல அதற்கும் கீழானவன்தான்.

திமுகவில் இல்லாத பணக்காரர்களா?.

திமுக வில் கட்சி உதவாமலேயே தனிப்பட்ட முறையில் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கக்கூடிய தகுதிவாய்ந்த பலர் உள்ளனர். ஆனால் தளபதி என்னை தேர்ந்தெடுத்ததிற்கு முதற்காரணம் நான் ஏழை என்பதுதான், அப்போதுதான் மற்றவர் பணம் கொடுக்கும் போது நான் பணம் கொடுக்க முயற்சி செய்ய மாட்டேன். மேலும் தளபதி அவர்களின் ஒரே முடிவு ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது, வெற்றி தோல்வி என்பது முக்கியமில்லை.

இங்கு தளபதி ஒரு பணக்கார வேட்பாளாரை நிறுத்தி இருந்தால் அவர் தன்னுடைய கவுரவத்திற்காக ஓட்டுக்கு 500, 1000 மோ தளபதி விருப்பத்திற்கு மாறாக கூட கொடுத்திருப்பார் அது தளபதியின் இலட்சியத்திற்கு எதிராக அமைந்திருகாகும்.

நான் இந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித இழப்பும் இல்லை ஏனென்றால் டெபாசிட் தொகை உட்பட அனைத்து செலவும் கட்சி செய்தது, கையிலிருந்து ஒரு காசும் செலவு  செய்யவில்லை. கவுரவகுறைச்சல் என்று ஏதுமில்லை ஏனெனில் மக்கள் என்னை ஒரு நட்சத்திர வேட்பாளர் என்று நினைக்கவில்லை,  இதனால் என்னுடைய அன்றாடப்பணி பதிக்கப்பட்ட போவதில்லை. நான் எப்போதும்போல என்னுடைய பணிகளை செய்வேன்.

முக்கியமாக ஒன்றை கூற வேண்டும். தளபதியின் ராஜதந்திரத்தின் வெளிப்பாடு போகப் போக தெறியும்.  இவ்வாறு தனது பதிவில் கூறியிருக்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு