தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு விரைவில் மத்திய பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார் என நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழர் தந்தை என்றழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மாநில பாஜகவுடன் இருந்த கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. இதனால் மோடிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் ஹாட்ரிக் பிரதமராக வருவது உறுதி. ஏனென்றால் இந்த கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அவருக்கு பெரிய அளவில் உதவி செய்ய போவது இல்லை. அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்ற நபரை தமிழகத்தில் மாநிலத் தலைவராக அமர்த்தியது தான் தவறு.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மத்திய பிரதேச தேர்தல்களில் அண்ணாமலை பார்வையாளராக மாற்றப்படுவார். விரைவில் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவார். தமிழகத்தில் அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் போது பாஜக ஜெயிக்கும் சீட்டுகள் பூஜ்யமாக தான் இருக்கும்.
பைக் வாங்குவது போல் நடித்து திருட்டு; 3 காவல் நிலைய போலீசாரை அலறவிட்ட மனநலம் பாதித்தவர்
அனைத்து ரசிகர் மன்றங்களையும் அழைத்து ஒரு கட்சிக்கு தேவையான அமைப்புகளை நடிகர் விஜய் கொண்டு வருகிறார். அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சொல்ல முடியாது. லியோ இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதா அல்லது நிறுத்தினார்களா என்ற இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. தயாரிப்பு நிறுவனமோ அவர்களே நிறுத்தியதாக தான் தெரிவித்து உள்ளனர் என்றார்.