சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திமுகவின் நாளிதழான முரசொலி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது.
பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்கு, முரசொலி அறக்கட்டளை சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திமுகவின் நாளிதழான முரசொலி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் முரசொலி அலுவலகம பத்திரத்தை வெளியிடுமாறு பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். அப்போது தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க;- காங்கிரசில் சேருவதா, திமுகவில் சேருவதா என்ற குழப்பத்திற்கு கமல்ஹாசன் விடை தேடுகிறார் - அண்ணாமலை விமர்சனம்
இது குறித்து, கடந்த 2019ல் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதாக, தமிழக பாஜகவின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் எல்.முருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;- திமுக திருந்தாது! அதிமுக பாஜக கூட்டணி முறிவு! வேறு ஏதோ காரணம் இருக்கு! சந்தேகத்தை கிளப்பும் டிடிவி.தினகரன்.!
இந்நிலையில், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.முருகன் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.