தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்லவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கோவையில் கடந்த 23ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, வியாழக்கிழமை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது விசாரணையை தொடங்கியது, இதையடுத்து பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜமீஷா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் வெடிகுண்டு தயார் செய்வதற்கான பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ரெட் பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் வயர்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களும், ஜிகாத் கொள்கைகள் தொடர்பான புத்தகங்களும் கிடைத்துள்ளது. சங்கமேஸ்வரர் கோயில் பூசாரி சுந்தரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்லவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால், பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31 ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன். (1/2)
— K.Annamalai (@annamalai_k)இதையும் படிங்க..கோடநாடு எஸ்டேட் கொலை & கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்! சிபிசிஐடி போலீசார் எடுத்த அதிரடி முடிவு
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !