சட்டப்பேரவையில் அதிர்ச்சி... மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை..!

By vinoth kumarFirst Published Mar 16, 2020, 11:31 AM IST
Highlights

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் 152 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்து 936 பேர் இந்த வைரசில் இருந்து குணமடைந்து உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. நாளுக்குநாள் இதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் 152 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்து 936 பேர் இந்த வைரசில் இருந்து குணமடைந்து உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. நாளுக்குநாள் இதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

இதையும் படிங்க;- நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாங்க ரெடி... ஆளுநரிடம் கடிதம் கொடுத்து அமித்ஷாவை அலறவிடும் கமல்நாத்..!

இந்நிலையில், மகாராஷ்டிரா, கேரளா, அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரா, லடாக், காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய 13 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டார். கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மத்திய அரசு மற்றும் மாநில தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க;- பெரும்பான்மையான இந்துக்கள் ஒன்றுபட்டால் என்ன ஆகும் தெரியுமா.? முஸ்லிம்களுக்கு எதிராக கொந்தளித்த புதிய தமிழகம்

இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. சோதனைக்கு பிறகே எம்எல்எக்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சட்டப்பேரவை ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது.

click me!