தெருக்களில் புணரும் நாய்களை விரட்டி அடிக்கும் பொறுக்கிகள்... இளமதி விவகாரத்தில் வன்னியரசின் மோசமான கருத்து..!

Published : Mar 16, 2020, 11:24 AM IST
தெருக்களில் புணரும் நாய்களை விரட்டி அடிக்கும் பொறுக்கிகள்... இளமதி விவகாரத்தில் வன்னியரசின் மோசமான கருத்து..!

சுருக்கம்

தெருக்களில் புணரும் மார்கழி மாதத்து நாய்கள் என இளமதி விவகாரத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

தெருக்களில் புணரும் மார்கழி மாதத்து நாய்கள் என இளமதி விவகாரத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கவுந்தர்பாடியை சேர்ந்தவர் செல்வன். இவரும் குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஜோடி இதையடுத்து சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இருவருக்கும் சுயமரியாதை திருமணம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை தாக்கிவிட்டு காதல் ஜோடியை காரில் கடத்தி சென்றனர். இளமதி இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று காதலனை மட்டும் மீட்டனர். அந்த இடத்தில் இளமதி இல்லை. இதனால் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜரானார். அவர் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது முக நூல் பக்கத்தில், ‘’தெருக்களில் புணரும் மார்கழி மாதத்து நாய்களை பிரம்பெடுத்து வேலைவெட்டி இல்லாமல் விரட்டி அடிக்கும் பொறுக்கிகளை இன்னமும் கிராமங்களில் பார்க்கத்தான் செய்கிறோம். இந்த பதிவுக்கும் கொளத்தூரில் சாதிமறுப்பு செய்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை’’என அவர் தெரிவித்துள்ளார். 
 

 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!