மதுரையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ஊழல்.!! எம்.எல்.ஏ, பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் குற்றச்சாட்டு.!!

By Thiraviaraj RMFirst Published Mar 16, 2020, 10:17 AM IST
Highlights

'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில் அரசு அதிகாரிகளும் , ஆளும் கட்சியினரும் தற்போது கொள்ளையடிக்கும் வேலையை செய்து வருகின்றனர் என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

T.balamurukan

'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில் அரசு அதிகாரிகளும் , ஆளும் கட்சியினரும் தற்போது கொள்ளையடிக்கும் வேலையை செய்து வருகின்றனர் என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இலவச இ சேவை மையத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு  துவக்கி வைத்தார்,


 இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்..,  
"ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது அரசு அதிகாரிகளும் , ஆளும் கட்சியினரும் கொள்ளையடிக்கவும், ஊழல் செய்யவும் தான் செயல்படுத்தப்படுகின்றது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்தினை கேட்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மக்களை பாதிக்கும் செயலை செய்கின்றனர், அதிமுக ஆட்சி முடிய இன்னும்  ஒராண்டு மட்டும் உள்ள நிலையில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மதுரை பெரியார் பேருந்து நிலையம், அடுத்து தமுக்கம் மைதானத்தில் மிகப் பெரிய கூட்ட அரங்கு கட்டுவது என   
ஒப்பந்தங்கள் மூலம் எதையெல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அத்தனை திட்டங்களையும்  தற்போது இந்த ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர் என்றும், இந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த அரசுக்கு உரிமை இல்லை எனவும், ஜெயலலிதா இருந்திருந்தால் சி.ஏ.ஏ , என்.பி.ஆர் உள்ளிட்ட சட்டங்களை கண்டிப்பாக எதிர்த்திருப்பார், ஆனால் தற்போது உள்ள எடப்பாடி தலைமையிலான அரசு மத்திய அரசிடம் ஆமா சாமி போடுபவர்களாக மட்டுமே இருக்கின்றனர் என தெரிவித்தார்.


முன்னுதாரணமான மோசடி திட்டம் என்பதற்கு உதாரணம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகும்.ராணி மங்கம்மாள் காலத்தில் இருந்து வரலாற்று சிறப்புடைய தமுக்கம் மைதானத்தை யாருடைய கருத்தை கேட்டு மூடுகின்ற முடிவை எடுத்தார்கள் .சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து ,திராவிட இயக்கங்களின் கால கட்டத்தில் மிக முக்கிய நகரின் மையப்பகுதியில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம் அமைத்திட உள்ளதாக சொல்வது மோசடிக்கு தான் வழிவகுக்கும் .எந்த பணியையும் இவர்களால் முடித்திட முடியாது .ஏற்கனவே நீர்நிலைகள் அனைத்துமே அரசு கட்டிடங்களாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் இது போன்ற முடிவுகள் யார் விருப்பப்படி எடுக்கப்படுகிறது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதிக்கின்ற பணி மிகவும் மோசமான ஒன்றாகும்.இப்படி ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கமிஷனர் மட்டுமே தனி அதிகாரியாக இருந்து கொண்டு மக்களின் விருப்பத்தை மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விருப்பத்தை அறியாமல் திட்டங்களை செயல்படுவது மோசமான முன்னுதாரணம் மட்டுமல்லாமல் ஊழலுக்கு மட்டுமே வழிவகுக்கும்.வார்டு வரையறையை பொறுத்தமட்டில் மிக தெளிவான ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.ஆனால் தாங்கள் செய்தது சரிதான் என அவர்கள் நீதிமன்றத்தில் சொல்கிறார்கள் .என்னுடைய தொகுதியில் வட்டத்திற்கு 15000  மக்கள் தொகை ,அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதியில் வட்டத்திற்கு 11000  மக்கள் தொகை என மறு வரையறை செய்வது எப்படி முறையாகும் .நிச்சயமாக  நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

click me!