ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கும் பிரச்சார பீரங்கி ராகவா லாரன்ஸ்... தமிழகம் முழுவதும் என்ன செய்ய போகிறார்..!!

Published : Mar 16, 2020, 09:13 AM ISTUpdated : Mar 16, 2020, 09:16 AM IST
ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கும் பிரச்சார   பீரங்கி ராகவா லாரன்ஸ்... தமிழகம் முழுவதும் என்ன செய்ய போகிறார்..!!

சுருக்கம்

ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல பிரச்சார பீரங்கியாக கிளம்பியிருக்கிறார்  நடிகா் ராகவா லாரன்ஸ்.

T.Balamurukan

ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல பிரச்சார பீரங்கியாக கிளம்பியிருக்கிறார்  நடிகா் ராகவா லாரன்ஸ்.

 நடிகா் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேசியவர்.., "மாற்றம் வர மக்களிடம் எழுச்சி வர வேண்டும். அப்படி எழுச்சி ஏற்பட்டால், அரசியலுக்கு வருவேன்’’ என அறிவித்தார். தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், இந்தக் கருத்தை மக்களிடம் எடுத்து செல்வார்கள் என்றும் தெரிவித்தார்கள். மாவட்ட ரீதியாக ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்கள் மக்கள் சந்திப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனா். தற்போது ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்.

இது தொடா்பாக தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்..,

'குரு சேவை. உங்களுக்குத் தெரியும். என் தலைவரைப் போலவே எனக்கும் எந்தத் தேவையும் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. எந்தக் கட்சிக்கும் எதிரி கிடையாது. குரு ஒரு வழி காட்டியிருக்கிறார்.அவர் வழிநடப்பதும்,அவர் பாதையை பலப்படுத்துவதும் என் கடமை.கடமையை நிறைவேற்ற களமிறங்குகிறேன்.மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லலை', என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்