அமைச்சர் வேலுமணியை அவதூறாக வாட்ஸ் அப்பில் பரவ விட்ட திமுக பிரமுகர் கைது.!! பராக்.. பராக் திமுக.!!

Published : Mar 15, 2020, 08:40 PM IST
அமைச்சர் வேலுமணியை அவதூறாக வாட்ஸ் அப்பில் பரவ விட்ட திமுக பிரமுகர் கைது.!! பராக்.. பராக் திமுக.!!

சுருக்கம்

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக கூறி, அதிமுகவைச் சேர்ந்த கவுதம் என்பவர், போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாருக்காக திமுக பிரமுகர் முருகனை கைது செய்திருக்கிறது போலீஸ், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   

T.Balamurukan

 கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். திமுக மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக கூறி, அதிமுகவைச் சேர்ந்த கவுதம் என்பவர், போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கோவை ராமநாதபுரம் போலீசார் நேற்று நள்ளிரவு, முருகனை வீட்டில் இருந்து அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்து திமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து முருகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், முருகனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
திமுக சார்பில், அமைச்சர் வேலுமணியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..