ஒரே நாளில் 3அமைச்சர்களை அலற விட்ட இஸ்லாமிய பெண்கள்.!! பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட அமைச்சர்கள்!!

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2020, 8:18 PM IST
Highlights

என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.சிபற்றி ஏன் பேசவில்லை’ என்று அடுக்கடுக்காகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இடம் இஸ்லாமிய பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

T.Balamurukan
ஒரே நாளில் 3அமைச்சர்களை அலறவிட்ட இஸ்லாமிய பெண்கள்,  இதனால் அமைச்சர்கள் நிகழ்ச்சிகளை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு கிளம்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.சிபற்றி ஏன் பேசவில்லை’ என்று அடுக்கடுக்காகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இடம் இஸ்லாமிய பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகரில் கூட்டுறவு துறை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய தொடக்க விழா  நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுமற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

 கூட்டுறவு துறை சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்பொழுதுகூட்டுறவு வங்கி கடனாக ரூபாய் 8 லட்சம் பெறுவதற்காக மேடைக்கு வந்த கூட்டுறவு சங்கத் தலைவி முகமது கிலோபார் பாத்திமா அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினார்.


அப்போது என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.சிபற்றி ஏன் பேசவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார் அந்த பெண்மணி.

அதற்கு அமைச்சர்கள் இருவரும் அமைதியாக இருக்குமாறும், இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பதிலளித்தனர். இருந்த போதிலும் அதிகாரிகள் அந்த பெண்ணை விழாமேடையில் இருந்து கீழே இறக்கி விடுவதில் குறியாக இருந்தனர். இந்தாலும் அந்த பெண் திரும்ப திரும்ப வந்து ஏன் வாக்களித்தீர்கள் என்று கேட்க அதற்கு செல்லூர் ராஜூ பதிலளிக்க முயற்சி செய்தார் .இருந்தாலும் அந்த பெண் அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அமைச்சர் செல்லூர் ராஜின் கையை சுரண்டி அமையாக இருக்க சொன்னார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அமைச்சர்கள் எதிர்பார்க்காத நிலையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றது. சிஏஏ சட்டத்தை நிறைவேற்ற அதிமுக அரசு உறுதுணையாக இருந்தது என்று கூறி அதிராம்பட்டிணம் கல்லூரியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் என முற்றுகையிட்டனர். கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

click me!