எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பது டெண்டர் படை... அதிகாரம் போனால் காலியாகிவிடும்... டிடிவி தினகரன் அதிரடி!

Published : Mar 15, 2020, 08:10 PM IST
எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பது டெண்டர் படை... அதிகாரம் போனால் காலியாகிவிடும்... டிடிவி தினகரன் அதிரடி!

சுருக்கம்

"சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமமுக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்தக் கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை. ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே அது அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
"சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமமுக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்தக் கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். அமமுகவில் இருப்பது தொண்டர் படை! அம்மாவின் கட்சியை மீட்க போராடும் லட்சியப் படை! தேர்தல் அரசியலைத் தாண்டி இப்படை எப்போதும் களத்தில் நிற்கும். பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை! ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே அது அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும். அதன்பிறகு என்னவாகும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!