பெட்ரோல்,டீசல் விலை உயர்த்திய மேதைகள்., கச்சாஎண்ணெய் விலை சரிவுக்கு பதிலளிக்காமல் முகத்தை திருப்பும் அமைச்சர்

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2020, 9:44 PM IST
Highlights

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டும் என பிரதமரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகக் கூறியிருந்தேன். ஆனால், என்னுடைய அறிவுரையைக் கேட்பதற்குப் பதிலாக, நமது மேதைகள், என்ன செய்தார்கள் தெரியுமா, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திவிட்டார்கள் என ட்விட்டரில் நக்கலடித்துள்ளார் ராகுல்காந்தி.

T.Balamurukan

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது. சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து மலிவான விலையில் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலை அதற்கேற்ப குறைக்கப்படவில்லை. மத்திய அரசு  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக உயர்த்தியது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இது கச்சா எண்ணெய் விலை சரிவுடன் சரிசெய்யப்படுவதால் விற்பனை விலையில் மாற்றம் இருக்காது. இந்த வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது எதிர்கட்சிகள்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில்..,

'இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டும் என பிரதமரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகக் கூறியிருந்தேன். ஆனால், என்னுடைய அறிவுரையைக் கேட்பதற்குப் பதிலாக, நமது மேதைகள், என்ன செய்தார்கள் தெரியுமா, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திவிட்டார்கள்" என பதிவிட்டுள்ளார்.

 மத்திய நிதி மந்திரி  நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள், கச்சா எண்ணெய் விலை குறைந்தநிலையில் அதன் பலன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரியை உயர்த்தியது குறித்துக் கேட்டனர். அந்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். இந்த வீடியோ காட்சியையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்து வெளியிட்டிருக்கிறார்.

click me!