செங்கோலை வைத்து அரசியலா? இவர்களை தமிழ் அன்னையே மன்னிக்க மாட்டார் - தமிழிசை காட்டம்

By Velmurugan s  |  First Published May 29, 2023, 6:17 PM IST

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதற்கு தமிழ் அறிஞர்கள் பாராாட்டு தெரிவித்திருக்க வேண்டும் மாறாக விழாவை புறக்கணித்திருக்கிறார்கள். இவர்களை தமிழ் அன்னையே மன்னிக்க மாட்டார் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதற்காக தமிழ் அறிஞர்களின் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டும் விழா துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் ஓதுவார்கள் திருவாசகத்தை பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதற்காக பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து தமிழ் அறிஞர்கள் பேசினார்கள். தொடர்ந்து துணைநிலை ஆளுநருக்கு தமிழ் அறிஞர்களின் சார்பில் செங்கோல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை ஆளுநர் தமிழிசை, நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கன்னித்தமிழ் ஒலித்துக் கொண்டே இருந்தது. தமிழின் தொன்மையையும், தமிழின் பெருமையையும் மற்ற மாநிலத்தவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் தமிழ் செங்கோல் மாநாடு புதுச்சேரியில் நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

கோவையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள், சிறுவர்கள் மகிழ்ச்சி

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் செங்கோலை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று கூறுவது தவறானது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழ் ஒலித்துக் கொண்டே இருந்தது என்பது பெருமையான விஷயம். நாடாளுமன்றத்தில் செங்கோல் அமைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் உட்பட அனைத்து தமிழ் அறிஞர்களும் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் அறிஞர்கள் விழாவை புறக்கணித்து இருப்பது என்பது தவறு. இவர்களை தமிழ் அன்னையே மன்னிக்க மாட்டார் என்றார்.

click me!