கஞ்சா, கள்ளசாராயம் போன்ற போதைப் பொருட்கள் திமுகவின் மேற்பார்வையில் விழுப்புரம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் காவல்துறை சிறந்த காவல்துறை. ஆனால், ஸ்டாலின் கையாலாகத்துறையாக ஆக்கிவிட்டார் என மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய அவர்;- தமிழகத்தில் விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் வீதியில் ஆறாக ஓடுகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேக் ஊட்டுகிறார். கேட்டால் யாரென்று தெரியாது என்கிறார். 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவரை திமுகவில் இணைத்துள்ளனர். கவுன்சிலராக அவரது மனைவி உள்ளார்.
undefined
கஞ்சா, கள்ளசாராயம் போன்ற போதைப் பொருட்கள் திமுகவின் மேற்பார்வையில் விழுப்புரம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாட்டின் காவல்துறை சிறந்த காவல்துறை. ஆனால், ஸ்டாலின் கையாலாகத்துறையாக ஆக்கிவிட்டார். பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.
காவல்துறை மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு ஏவல் வேலை செய்து வருகிறது. காவல்துறை முதலிலேயே எல்லாவற்றையும் கவனித்திருந்தால் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. டிஜிபி வைலேந்திர பாபு விளக்கம் கொடுத்துள்ளார் கள்ளச்சாராயம் அல்ல விஷச் சாராயம் என்று அரளிவிதையை அரைத்து குடித்தால் என்ன பால்டாயிலைக் குடித்தால் என்ன விஷம் விஷம் தானே.
சாராய ஆலைகளின் லாபர் கரூர் கேங் மற்றும் ஸ்டாலின் குடும்பத்திற்கும் தான் செல்கிறது. ஒரு ஆண்டுக்கு மட்டும் கலால் துறைக்கு வரக்கூடிய வரி ரூ.1000 கோடி ஸ்டாலின் குடும்பத்திற்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் செல்கிறது. விடியா திமுக ஆட்சியில் அனைத்திலும் ஊழல், ஸ்டாலின் குடும்பம் தமிழகத்தையே சுரண்டி வருகிறது என சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார்.