நாம் ஏதோ பாவம் செய்து விட்டோம். நன்றாக சென்று கொண்டிருந்த அதிமுக ஆட்சி போய் திமுக ஆட்சி வந்துவிட்டது என மக்கள் நினைப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தனக்கு தானே பாராட்டு விழா
மதுரையில் அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடத்திய விதத்தை பார்த்து மத்திய அரசோடு சேர்ந்து மக்களும் பாராட்டினார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தனக்கு தானே பாராட்டை நடத்திக்கொண்டு வாரிசு அரசியல் ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக கூறினார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்த போது 2ஜி ஸ்பெக்ரம் ஊழலை பார்த்து இந்தியா மட்டுமல்ல உலகமே வியந்தது. 2ஜி ஊழலால் தமிழ்நாட்டை அனைவரும் ஒரு மாதிரியாக பார்த்தனர். ஊழல் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என நம்மை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.
கரூர் கம்பெனிக்கு செல்லும் டாஸ்மாக் பணம்
தமிழகமத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக விமர்சித்தவர், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம், கள்ளச்சாராயம் விற்றால் 50ஆயிரம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார். அமாவாசை நடத்தும் ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் எல்லாம் நடப்பதாகவும், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுப்பாட்டிலுக்கு 10ரூபாய் முதல் 15 வரை கிடைக்கும் வருவாய் கரூர் கம்பெனிக்கு செல்வதாகவும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற போது காபி கொடுத்து உணவு கொடுத்து வரவேற்றார். ஆனால் செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற போது அடித்து மண்டையை உடைக்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியில் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் நடக்கவில்லை என செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்