மல்யுத்த வீராங்கனைகள் ஆதாரங்கள் கொடுக்கவில்லை.! புகார் செய்ததும் கைது செய்ய சொல்வது ஏற்புடையதல்ல- அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published May 29, 2023, 3:45 PM IST

முதலமைச்சர் ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணம் செய்து அதை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்; ஆனால் அதன் டிக்கெட் விலையை அவர் பதிவு செய்யவில்லை-அனைத்து தர மக்களும் புல்லட் ரயிலை பயன்படுத்த முடியாது-ஆனால் வந்தே பாரத் அப்படி இல்லையென  அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சி

சென்னை அடையாறு உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்,  இந்தியாவில் எங்கும் நிகழாத ஊழல் கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்றது. அதனை தற்போது பா.ஜ.க. மாற்றி உள்ளது.டெல்லி மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு ரூ.100 வழங்கப்பட்டால் கடைக்கோடி நபருக்கு 100 ரூபாயும் செல்லும். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் அப்படி இல்லை. 

Latest Videos

undefined

கொரோனா இல்லாத இந்தியா

கொரோனாவை சரியாக கையாண்ட நாடு என்றால் அது இந்தியா தான். மக்கள் தொகை அடிப்படையில் அமெரிக்கா உள்ள வெளிநாடுகளில் கொரோனா மரணம் அதிகம். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 220 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.‌ கொரோனா இல்லாத நாடாக இந்தியா மாறி இருக்கிறது. மூன்றரை கோடி குடும்பங்களுக்கு அரசு வீடு கட்டி கொடுத்துள்ளது.  வீட்டுக்கு வீடு குடிநீர் இந்த திட்டத்தில் 12 கோடி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.‌ தமிழகத்தில் 62 சதவீத பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 80 கோடி இந்தியர்களுக்கு கொரோனா ஆரம்பத்தில் இருந்து 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை ஆயுஷ் மான் பாரத் மூலம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களின் எண்ணிக்கை உயர்வு

9 ஆண்டு கால காலத்தில் யூரியா தட்டுப்பாடு இல்லை. தமிழகம் சமூகநீதி மண். இந்திய அளவில் சமநீதி கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி தான். குறிப்பாக அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் உற்ற நண்பராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். வேகத்துடன் நமது செயல்பாடு உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம்மிடம் இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 இந்த 9 ஆண்டு கால ஆட்சியின் போது 74 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. நம்மிடம் தற்போது மொத்தம் 148 விமான நிலையங்கள் உள்ளன. நீர்வழிப்பாதையை முந்தைய காங்கிரஸ் அரசு சரியாக பயன்படுத்தவில்லை. இது அம்பேத்கர் கனவு. 

இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனை

முதல்வர் நேற்று புல்லட் ரயில் சென்றுள்ளார்.‌ ஆனால் அதன் பயணச்சீட்டு விலை அதிகம், அதை அவர் சொல்லவில்லை. ஆனால் வந்தே பாரத் மிகச்சிறப்பாக உள்ளது.‌ ஒட்டுமொத்தமாக 19 வந்தே பாரத் செயலில் உள்ளது. 2014-ம் ஆண்டு வரை 5 மாநகரத்தில் மெட்ரோ இருந்தது. ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.‌ 9 ஆண்டுகால 15 எய்ம்ஸ் மருத்துவமனை அதிகரித்துள்ளது. 700 மருத்துவக்கல்லூரியை கொடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு தேடி தேடி 11 மருத்துவக்கல்லூரியை கொடுத்துள்ளார். ஆனால் தமிழக அரசு அதனை சரியாக பயன்படுத்தவில்லை. பராமரிக்கலில்லை. அது எங்களுக்கு வருத்தம்.

புகார் தெரிவித்ததும் கைது செய்ய கூறுவதா.?

புதிய கல்விக் கொள்கையில் மருத்துவம், பொறியியல் என பாடங்களை தாய் மொழியில் படிக்க மோடி வழி வகுத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் தமிழ்பாடம் மூடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொளையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தம் தான் என்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்தார். அப்போது  டெல்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கை ,  தாங்கள் குற்றச்சாட்டு கூறியவுடன் , குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறுவதை போல் உள்ளது.  அவ்வாறு செய்தால் அரசின்   சட்டத்திட்டம்  கேள்விக்குள்ளாகும் , புகாரளிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு , ஆனால் விசாரணை நடத்தித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  99 சதவீத வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும்  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவவில்லை. 

ஆதாரங்கள் கொடுக்கவில்லை

திமுக அரசு மீது நான் ஊழல் குற்றச்சாட்டுகளை   வைத்துள்ளேன் , ஆனால் நான் பெரிய ஆள் என்பதால் அவர்கள் மீது புகார் கூறியவுடனேயே கைது செய்ய வேண்டும் என்று  நான் கூறினால் அது சரியாக இருக்காது. மல்யுத்த வீராங்கனைகள் 7 நிபந்தனைகளை சொல்லியுள்ளனர் , அதில் 2 வது நிபந்தனையே குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவதாக உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  வீராங்கனைகளை யாரும் மரியாதை செய்யாத போது ,  அவர்களை அழைத்து பாராட்டியவர் பிரதமர் மோடி. மல்யுத்த வீராங்கனைகள் தங்களது குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லையென அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

நாம ஏதோ பாவம் செய்து விட்டோம்.! அதனால்தான் அதிமுக ஆட்சி போய் திமுக ஆட்சி வந்து விட்டது- செல்லூர் ராஜு ஆவேசம்

click me!