Tamil Maanila Congress : பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது தமாகா? என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Feb 24, 2024, 8:20 AM IST
Highlights

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் இதுவரை கூட்டணியில் யார் இடம் பெற போகிறார்கள் என்பதே தெரியாமல் இருந்து வருகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 தொகுதிகள் தரும் கட்சிகளுடனே கூட்டணி என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பாஜக, அதிமுக எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.  இதில், ஆளும் திமுக அரசு  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

Latest Videos

இதையும் படிங்க: அதிமுகவை கழற்றிவிட்ட தமாகா.. பாஜகவுடன் கூட்டணி உறுதியானது?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் இதுவரை கூட்டணியில் யார் இடம் பெற போகிறார்கள் என்பதே தெரியாமல் இருந்து வருகிறது. மறுபுறம் பாஜக கூட்டணியில் இதுவரை ஓபிஎஸ் அணி, டிடிவி.தினகரனின் அமமுக, பாரிவேந்தரின் ஐஜேகே, புதிய நீதிக்கட்சி மட்டுமே இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

ஆனால், பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் யாரும் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறார்கள் என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் 2 தொகுதிகள் தரும் கட்சிகளுடனே கூட்டணி என யுவராஜா தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க:  ஒரு சீட் கேட்ட மனித நேய மக்கள் கட்சி.. அரசு பதவி கொடுத்து சமாதானம் செய்ய முயலும் ஸ்டாலின்- நடந்தது என்ன.?

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா: நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் தரும் கட்சிகளுடனே கூட்டணி என்று தெரிவித்துள்ளார். மேலும் தமாகா கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட முன்னுரிமை அளிக்கும் கட்சியுடன் என்று கூறியுள்ளார். தாமரை சின்னத்தில் தான் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் கூறிய நிலையில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!