ஊழல், குடும்ப, அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திராவிட அரசியலில் இருந்து மக்கள் விடுதலை எதிர்பார்க்கிறார்கள். வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டம், வரும் பாராளுமன்றத் தேர்தல்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 84ல், செண்பகவல்லி அணையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி 34 மாதங்கள் ஆகிவிட்டது. கேரளா கம்யூனிஸ்ட்களுடன் அன்பு பாராட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழக கம்யூனிஸ்ட் கட்சி இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாது. அதே போல, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த பேபி அணையை சரி செய்ய வேண்டும் என்றார்கள். இன்று வரை பேபி அணையும் சரிசெய்யப்படவில்லை.
இதையும் படிங்க: Annamalai: தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான பாசிச ஆட்சி.. ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை!
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற இரண்டு நவோதயா பள்ளிகள் – காமராஜர் பள்ளி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தாய்மொழிக் கல்வியோடு சேர்த்து, ஆங்கிலம், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மொழி விருப்பப் பாடங்கள் என ஐந்து மொழிகள் கற்கும் வாய்ப்பு, உலகத் தரம் வாய்ந்த கல்வித் திட்டம் உருவாக்கப்படும்.
இதுவரை அரசு வேலை பெறாத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கு, அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். இதை உறுதி செய்ய ஒரு தனி இடஒதுக்கீடு முறை உருவாக்கப்படும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக் கடைகள் திறப்பு, பனை பொருள்கள் ஊக்குவிக்கப்படும். காவல்துறைக்கு, 8 மணி நேர பணிநேரம் மற்றும், ஊதியம் இரட்டிப்பாக்கப்படும். அறம் இல்லாத இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும். மத்திய அரசு வழங்கும் விவசாய கௌரவ நிதி 6000 ரூபாயுடன், மாநில அரசின் பங்கு 9000 ரூபாய் என, 15,000 ரூபாய் விவசாயிகளுக்கு பாஜக வழங்கும்.
இதையும் படிங்க: திமுக அரசு உருவாக்கியது உண்மைச் சரிபார்ப்புக் குழு அல்ல.. உண்மைக்கு அப்பாற்பட்ட குழு-கிண்டல் செய்யும் அண்ணாமலை
ஊழல், குடும்ப, அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திராவிட அரசியலில் இருந்து மக்கள் விடுதலை எதிர்பார்க்கிறார்கள். வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டம், வரும் பாராளுமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை, தமிழகம் முழுவதும் நிச்சயம் துணை நிற்கும். தமிழகத்தில் உருவாகவிருக்கும் அரசியல் மாற்றத்திற்கான விதையாக இந்தத் தேர்தல் அமையும் என அண்ணாமலை கூறியுள்ளார்.