கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக அப்போது வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வரும் 26ம் தேதி தீர்ப்பு வழங்குகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக அப்போது வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அதிமுக ஆட்சிக்காலத்தில் 2012ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதையும் படிங்க: மக்களவை தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் கே.என். நேருவின் மகன்.. அருண் நேரு போட்டியிடும் தொகுதி இதுவா.?
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச்ச மாதம் சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்.. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி? எத்தனை தொகுதிகள் தெரியுமா? அதிர்ச்சியில் பாஜக!
அதன்படி, வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கில் வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கவுள்ளார்.