தலிபான், ஹிட்லர் வம்சத்தில் வந்தவர்கள் பாஜகவினர்.. சகட்டு மேனிக்கு சாடிய சித்தராமையா..!

Published : Sep 27, 2021, 07:01 PM IST
தலிபான், ஹிட்லர் வம்சத்தில் வந்தவர்கள் பாஜகவினர்.. சகட்டு மேனிக்கு சாடிய சித்தராமையா..!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆபரேஷன் தாமரை மூலம் எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தனது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். இப்போது, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவிட்டார்கள், தற்போது பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார் 

பொய்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வரும் பாஜகவினர் தலிபான், ஹிட்லர் வம்சத்தில் வந்தவர்கள் என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆவேசமாக கூறியுள்ளார். 

பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்களையும், நிவாரண உதவிகளையும் வழங்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான சித்தராமையா பங்கேற்றார். அப்போது, அவர் பேசுகையில்;- ஆளும் பாஜக மற்றும் அதன் தலைவர்களை தலிபான் மற்றும் ஹிட்லரின் வம்சாவளியை சேர்ந்தவர்கள். கர்நாடகாவின் ஆட்சியை நடத்தி வருவது ஆர்எஸ்எஸ் தான். எனவே  கர்நாடகா மக்கள் பாஜகவினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாஜகவிடம் பொய்களின் தொழிற்சாலை உள்ளது. 

அந்த தொழிற்சாலையில் இருந்து அவர்கள் பொய்களை மட்டுமே உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகின்றனர். பொய்யான தகவலை தருவதற்கும் அதனை பிரச்சாரம் செய்யவும் சர்வாதிகாரி ஹிட்லருக்கு கோயபல்ஸ் என்ற அமைச்சர் இருந்தார். அதுபோல, பாஜகவுக்கு பொய் தொழிற்சாலைகள் உள்ளன. கர்நாடக மக்களின் செல்வாக்கில் ஆட்சிக்கு வராமல், புறவாசல் வழியாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. 

முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆபரேஷன் தாமரை மூலம் எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தனது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். இப்போது, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவிட்டார்கள், தற்போது பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார் என  சித்தராமையா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!