மீண்டும் அது போன்ற எதிர்பாராத நிகழ்வு நடக்குமா என ஏங்கும் எடப்பாடியார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்..!

Published : Sep 27, 2021, 06:29 PM IST
மீண்டும் அது போன்ற எதிர்பாராத நிகழ்வு நடக்குமா என ஏங்கும் எடப்பாடியார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்..!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் பரவலாக்க  வேண்டும் என்ற கருத்து உள்ளது. இந்தியாவிலேயே உள்ள பெரிய கட்சி காங்கிரஸ். மாற்றங்கள் காங்கிரஸ் கட்சியில் வந்து கொண்டுள்ளது. அதிரடியான மாற்றத்தை பஞ்சாபில் கொண்டு வந்துள்ளோம். 

இந்தியாவே  திரும்பி பார்க்கும் வகையில் அளவுக்கு தமிழகத்தில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  கார்த்தி சிதம்பரம்;- காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் பரவலாக்க  வேண்டும் என்ற கருத்து உள்ளது. இந்தியாவிலேயே உள்ள பெரிய கட்சி காங்கிரஸ். மாற்றங்கள் காங்கிரஸ் கட்சியில் வந்து கொண்டுள்ளது. அதிரடியான மாற்றத்தை பஞ்சாபில் கொண்டு வந்துள்ளோம். நமது வரிப்பணம் நமக்கு செலவு செய்யாமல் வடநாட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு செலவு செய்கிறது என்றார். 

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக இங்கு வரக்கூடாது  என்று பொதுமக்கள் தெளிவாக உள்ளனர். திமுகவை பொறுத்தவரை பொதுமக்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. 

எடப்பாடி பழனிசாமி எதிர்பாராத விபத்தினால் ஆட்சிக்கு வந்தார். மீண்டும் அது போன்ற எதிர்பாராத நிகழ்வு நடக்கலாம் என்று ஏங்குகிறார். 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றிபெறும். இலங்கை கடற்படையினரால்  தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!