சீமான் தமிழரா? சீமான் அம்மா தமிழச்சியா? அவர் மலையாளி... எச்.ராஜா கடும் விமர்சனம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2021, 4:49 PM IST
Highlights

இந்துமதம் இல்லாமல் தமிழ் இல்லை, சீமான் தமிழரா?  சீமான் அம்மா தமிழச்சியா? அவர் மலையாளி. ஆனால் என்னை பீகாரில் என்கிறான் ஒரு முட்டாள். நான் பச்சை தஞ்சாவூரான், ஆரியம் பற்றி பேசும் சுபவீயின் மூளை குப்பைத்தொட்டி ஆகிவிட்டது, 

சரக்கு மிடுக்கு பேச்சு மூலம் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை சாதி பிரச்சினையாக்குவோரை இந்த படம் கண்டித்துள்ளது என ருத்ர தாண்டவம் படத்தை குறித்து எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார். சீமான் யாரென்றும், சீமான் அம்மா தமிழச்சியா? அவர் மலையாளி என்றும் எச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கிய ஜி. மோகன், நடிகர் ரிஷி ரிச்சர்ட் , கௌதம் மேனன், தர்ஷா குப்தா, ராதாரவி ஆகியோர் நடிப்பில் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 1ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது. இன்னிலையில் அதற்கான சிறப்பு காட்சிகள் ஒரு சில அரசியல் கட்சிகளுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதில் தமிழக பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் ஆகியோர் திரைப்படம் பார்த்தனர். பின்னர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, ருத்ரதாண்டவம் என்ற படத்தில் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல, ஒரு கருத்தை மக்களுக்கு சொல்வதாக உள்ளது. சட்டரீதியாக 18 வயதுக்கு முன்பு வருவது காதல் அல்ல, அது ஒரு ஈர்ப்பு. படிக்கும் குழந்தைகள் படிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்தவேண்டும் காதலில் அல்ல, இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாக எனக்கு இது குறித்து பல கவலைகள் இருக்கிறது, இளைஞர்கள்  அதிக அளவில்  போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என்பதையும் இந்த படம் சுட்டிக்காட்டியுள்ளது, அதேபோல இன்று செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துவிட்டன. நாளை தமிழன் தன் மனைவிக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாத நிலை உருவாகும், அதற்கு குடியும், போதையும் காரணமாக இருக்கும். சரக்கு மிடுக்கு பேச்சு மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து  சாதி பிரச்சனையை உருவாக்குபவர்களை இந்தப்படம் எச்சரித்துள்ளது. என்னிடம் கேள்வி கேட்கும் பலருக்கு தமிழ் சரியாக உச்சரிக்க கூட முடியவில்லை. அப்படிபட்டவர்கள்தான் எண்ணை கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் தமிழ் ஆர்வலர்கள் என கூறிக் கொள்கிறார்கள்.

இந்துமதம் இல்லாமல் தமிழ் இல்லை, சீமான் தமிழரா?  சீமான் அம்மா தமிழச்சியா? அவர் மலையாளி. ஆனால் என்னை பீகாரில் என்கிறான் ஒரு முட்டாள். நான் பச்சை தஞ்சாவூரான், ஆரியம் பற்றி பேசும் சுபவீயின் மூளை குப்பைத்தொட்டி ஆகிவிட்டது, அறிவாலயம் வாசலில் நிற்கும் பிச்சைக்காரன் அவர் என கடுமையாக விமர்சித்தார். அசோகப் பேரரசைக் காட்டிலும் மிகப்பெரிய பேரரசை ஆண்ட ராஜராஜ சோழனை இழிவுபடுத்திய ரஞ்சித் போன்றவர்களும் திரையுலகில் இருக்கிறார்கள், அதேபோல் இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள் ஜாதி பெயரை பயன்படுத்தக்கூடாது, மனமாற்றம் இல்லாத மதமாற்றம் ஏமாற்றம்தான். மதத்தின் பெருமைகளை சொல்லி மதம் மாற்றுவதில்லை, மற்ற மதத்தை இழிவுபடுத்தி மதம் மாற்றுகிறார்கள். உண்மையிலேயே இந்த படத்தில் நடித்துள்ள ராதாரவி தான் நடிகவேள் மகன் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். 
 

click me!