‘இதுவரை தமிழ்நாட்டில் 50 இடங்களில் மதத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடந்தது இல்லை’ என்று கூறியுள்ளார் வேல்முருகன்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு நான்கு வழி சாலை சந்திப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியின் மகன் சேவா மருத்துவக் கிளினிக்கை திறப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் வருகை தந்தார்.
மருத்துவ கிளினிக்கை திறந்து வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் வேல்முருகன். அப்போது பேசிய அவர், ‘சமீப காலமாக உச்ச நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் எல்லாம் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் பார்வை இருக்கிறது. உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதியின் அரசர்கள் ஆண்டாண்டு காலமாக சமூக நீதி, சமூக நல்லிணக்கம், மத சண்டைகள்லிருந்து பிளவுப்படாமல் பொறுப்பும் கடமையும் நீதிமன்றங்கள் இடத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க..மகளிர் விரும்பினால் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்கலாம்.. வாய்மொழி உத்தரவு உண்மையா ?
இதுவரை தமிழ்நாட்டில் 50 இடங்களில் மதத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடந்தது இல்லை. தமிழகம் இந்தியாவிலே அமைதியான மாநிலம் அமைதியான மக்கள் வாழ்கின்ற ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு இஸ்லாமிய கிறிஸ்தவர்களோடு அன்புகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். பண்பாட்டில் சிறந்து விளங்கும் தமிழகம் மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டையிடக் கூடாது என சமூக நீதி ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது.
நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்க்கு அனுமதி அளித்தது ஏற்புடையதல்ல அதே நேரத்தில் தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த தடை விதித்தது வரவேற்பு கூறியது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆர். எஸ். எஸ். ஊர்வலத்தை அக்டோபர் இரண்டாம் தேதி தவிர்த்து ஏனைய தேதிகளில் நடத்திக் கொள்ளலாம் என்பது நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் கூறுவது முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?
சமூக நீதி வாழ்ந்து மக்கள் வரும் மண் சமூக நீதி காக்கப்படும் என்று சொன்னால் நம்மை ஆளுகின்ற அரசுகள் எந்த ஒரு நிலைப்பாட்டிலும் உறுதியாக நின்று இந்த மக்கள் பக்கம் உறுதியாக இருக்க வேண்டும். மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ் அழுத்தத்திற்கோ ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகள் பணிய கூடாது என்னுடைய வேண்டுகோள்.
வருகின்ற 11ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற சமூகநலத்திற்காக பேரணியில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி கைகோர்க்கிறது ஏனைய கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மதக் கலவரம் இல்லாமல் அமைதியான தமிழகம் சமய நல்லிணத்திற்கு அமைதி வழி அறவழி மனிதச் சங்கிலி பேரணி நடைபெறுகிறது. விசிகதலைவர் திருமாவளவன் அழைப்பை ஏற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கலந்து கொள்கிறது’ என்று கூறினார்.
இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !