சபாநாயகர் காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்ட்…!!! – பொங்கி எழுந்த சாமிநாதன்..

First Published Jul 10, 2017, 6:35 PM IST
Highlights
Swaminathan said that Puducherry Speaker Vaithalingam is acting as an agent of the Congress party


புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம் காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரான சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் 30 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதில் 3 எம்.எல்.ஏக்களை அரசே நியமித்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதைதொடர்ந்ந்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆளும் நிலையில், பா.ஜ.க உறுப்பினர்களைநியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், இந்து அமைப்புகளின் தீவிர ஆதரவாளர் செல்வ கணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இதைதொடர்ந்து சபாநாயகர் இருக்கும் நிலையில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடியே அவர்கள் மூன்று பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

இது புதுச்சேரி ஆளும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று 3 எம்.எல்.ஏக்களின் நியமனத்தை ஏற்க முடியாது சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் இதுகுறித்து ஜனாதிபதியிடம் முறையிடுவேன் என கூறி கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். அவரை தொடர்ந்து சபாநாயகர் வைத்தியலிங்கமும் டெல்லி போயுள்ளார்.

இந்நிலையில், நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரான சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சபாநாயகர் வைத்தியலிங்கம் காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறார் எனவும், பதவி பிரமானம் செய்து வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

சட்டவிதிகள் தெரியாமல் சட்டம் படிக்காத சபாநாயகராக வைத்தியலிங்கம் உள்ளார் எனவும், பேரவை கூடும்போது பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் மூவரும் உள்ளே செல்வோம் எனவும் தெரிவித்தார்.

நாங்கள் செல்வதை தடுத்தால் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தி சட்டமன்றத்தை முடக்குவோம் என சாமிநாதன் தெரிவித்தார்.  

 

click me!