அன்புமணியை வெறுப்பேற்றும் சூர்யா... திருமாவுக்கு எழுதிய கடிதம்... அந்தப்பக்கம் மிரட்டல்... இங்கே பாராட்டா..?

By Thiraviaraj RMFirst Published Nov 15, 2021, 1:50 PM IST
Highlights

மன்னிப்பு கேளுன்னு மிரட்டிட்டு இருக்கும்போது இப்படி அவங்களுக்கு நேர்ரெதிர் அரசியல் செய்யும் தலைவருக்கு நன்றி மடல் வெளியிடுவதற்கு எல்லாம் எதற்கும் துணிந்தவன் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது

ஜெய்பீம் திரைப்படம் வாயிலாக 'கலைநாயகன்' சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய  தொண்டுள்ளத்தை - தொழிலறத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுவதாக தொல்.திருமாவளவன் எம்.பி., நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ள சூர்யா, கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும் அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ள அந்தக் கடிதத்தில், 

மதிப்பிற்குரிஅ திருமாவளவன் அவர்களுக்கு வணாக்கம். தங்கள் வாழ்த்தும் பாராட்டும், மன நிறைவை அளித்தன. மக்கள் தொகையில்  மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும், தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குறிப்பிட்டதைப்போல மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.

பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

’’ஆனாலும் உமக்கு குசும்பு தான்பா. அந்தப்பக்கம் 1லட்சம் ஒரு உதை, 5கோடி மன்னிப்பு கேளுன்னு மிரட்டிட்டு இருக்கும்போது இப்படி அவங்களுக்கு நேர்ரெதிர் அரசியல் செய்யும் தலைவருக்கு நன்றி மடல் வெளியிடுவதற்கு எல்லாம் எதற்கும் துணிந்தவன் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது இதற்கு சூர்யாவை வாழ்த்தி வருகின்றனர்.

’’எத்தனை பேரு படத்துக்கு பஸ்ட் லுக், சிங்கிள், டீசர், ட்ரைலர் னு எவ்ளோ சப்போர்ட் டுவிட் போட்டாரு மனுஷன். இப்போ அதுல யாராச்சும் சூர்யாவுக்கு ஆதரவா பேசுறாங்களா?

உதயநிதி ஸ்டாலின்,  நடிகராக இருக்கிறீர்கள், தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறீர்கள். சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள். முதல்வரின் மகனாக உள்ளீர்கள். நீங்கள் ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்?’’ என சூர்யாவுக்கு குரல் கொடுக்க பலரும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். 

click me!