பாஜகவுடனான உறவை முடித்துக் கொள்கிறேன் என திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா சிவா தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் தொலைப்பேசியில் உரையாடியபோது அவரை சூர்யா சிவா அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவரும் பேசியதாக கூறப்பட்ட ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திருப்பூரில் விசாரணை நடத்திய தமிழ்நாடு பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு சூர்யா சிவாவும், அந்த பெண் நிர்வாகியும் ஆஜராகினர். நடந்தவற்றை மறுந்துவிட்டு சுமூகமாக தங்கள் கட்சி பணிகளை தொடர விரும்புவதாக இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கத்தை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும்.
இதையும் படிங்க..முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! பரபரப்பு சம்பவம்.!
இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், ‘தமிழக பாஜகவுக்கு நீங்கள் ஒரு பொன்னான பரிசு அண்ணா. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக நிச்சயமாக நீங்கள் இருப்பீர்கள். கடந்த சில மாதங்களாக உங்கள் தலைமையின் கீழ் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தியாவின் அடுத்த பிரதமராக கூட போட்டியிடுவதற்கு நீங்கள் ஒரு திறமையான வேட்பாளர். இந்திய அரசியலில் உங்களின் வளர்ச்சியை கண்டு ரசிக்கிறேன். உங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி அண்ணா. எப்போதும் அன்புடன், என்றென்றும் சகோதரனாக உங்கள் பின்னால் இருக்கிறேன். எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் இனியாவது கட்சிக்காரர்களை நம்ப முயற்சி செய்யுங்கள். உங்கள் தலையீடு இல்லாமல் என் தலைவரால் அற்புதங்கள் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.
தயவு செய்து அவருக்கு இடம் கொடுங்கள். காயத்ரி (எல்.எம்) & டெய்சி (கே.வி) ஆகியோருடன் உங்கள் எல்லா விளையாட்டுகளையும் விளையாடாதீர்கள். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டுமெனில் நீங்கள் இருவரும் எனது தலைவர் வழியில் ஈடுபட வேண்டாம். என் அன்பிற்குரிய அண்ணன் அண்ணாமலை மீது எப்போதும் பாசம் உள்ளவன். அண்ணாமலையார் துணை என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது.. ஓங்கி அடிக்கும் சீமான் !!