தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது.. ஓங்கி அடிக்கும் சீமான் !!

By Raghupati R  |  First Published Dec 6, 2022, 3:54 PM IST

தமிழ்நாட்டுக்கு  வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


புரட்சியாளர் அம்பேத்கரின் 66ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சென்னை, அடையாறில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இந்த நாட்டின் பெருமை வல்லபாய் பட்டேல் அல்ல அம்பேத்கர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு அண்ணல் அம்பேத்கரை பெயரை வைப்பது பொருத்தமானதாக இருக்கும் அவரது நினைவு நாளில் மீண்டும் அதை வலியுறுத்துகிறோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் அம்பேத்கரை கொண்டாடுவதற்கு காரணம் வாக்கு மட்டுமே காரணம்.

Tap to resize

Latest Videos

மத்திய அரசு நிலம் கையகப்படுத்துவதில் காட்டும் தீவிரத்தை வேலைவாய்ப்பில் காட்டுவதில்லை. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வட மாநிலத்தவர்கள் தான் இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது. வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் இந்த நிலத்தின் அரசியலை அவன் தீர்மானித்து விடுவான்.

இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

ஈழத்தில் என்ன நடந்ததோ அதுவே தமிழகத்திலும் நடந்து விடும் வட மாநில தலைவர்களுக்கு குடும்ப அட்டை வேண்டுமானாலும் கொடுங்கள் ஆனால் அவர்களுக்கு வாக்கு அட்டை கொடுக்காதீர்கள். நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்கள் 20 தொகுதிகளில் பெண்கள் நாம் தமிழர் சார்பில் நிறுத்தப்படுவர். ஆளுநர் 6ஆவது விரல் அதை வெட்டி எறிய வேண்டும்.

எங்களுக்கு அஞ்சு விரல் போதும் ஆறாவது விரல் தான் ஆளுநர். ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் பொழுது ஆளுநர் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது. அரசு எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைக்கவில்லை என்றால் ஆளுநர் தேவையேயில்லை. ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் ஆளுநர் காசு வாங்கிக் கொண்டு கையெழுத்து போடாமல் இழுத்துக் கொண்டு இருக்கிறார் என்று பாஜகவையும், ஆளுநரையும் கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான்.

இதையும் படிங்க..முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! பரபரப்பு சம்பவம்.!

இதையும் படிங்க..பாஜகவுக்கு பின்னடைவு.. டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி கட்சி - கருத்துக்கணிப்பில் புது தகவல் !

click me!