கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும்..! பாஜக உடனான என் உறவை முடித்துக் கொள்கிறேன்- சூர்யா சிவா பரபரப்பு டுவீட்

Published : Dec 06, 2022, 02:23 PM ISTUpdated : Dec 06, 2022, 02:25 PM IST
 கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும்..! பாஜக உடனான என் உறவை முடித்துக் கொள்கிறேன்- சூர்யா சிவா பரபரப்பு டுவீட்

சுருக்கம்

பாரதிய ஜனதா கட்சி பெண் தலைவரான டெய்சியை அபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்திருந்தைடுத்து கட்சியில் பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா சிவா நீக்கப்பட்டார். இந்தநிலையில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வதாக சூர்யா சிவா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாஜக நிர்வாகியோடு சூர்யா சிவா மோதல்

பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சிக்கும், ஓபிசி அணி நிர்வாகியான சூர்யா சிவாவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டெய்சியை தோலைபேசியில் தொடர்பு கொண்ட சூர்யா சிவா ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் பாஜக பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை விமர்சித்து இருத்தார். இதன் காரணமாக சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மத்தியில் குரல் எழுந்தது. இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அந்த குழுவின் முடிவின் படி கட்சி பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்சி உறுப்பினராக பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநரை திரும்ப பெறக்கோரி முற்றுகை போராட்டம்..! ஒன்றன் பின் ஒன்றாக களத்தில் குதிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்

கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும்

இந்தநிலையில் திடீரென சூர்யா சிவா டுவிட்டர் பதிவ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயக பிள்ளை அவர்கள் மாற்றப்பட வேண்டும் .இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி சூர்யா சிவா என பதிவிட்டுள்ளார்.

 

கட்சியில் இருந்து விலகுகிறேன்

டெய்சி உடனான ஆடியோவில் பாஜக பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை மோசமாக விமர்சித்து இருந்தார். பெண்களுடன் தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதன் காரணமாக கேசவ விநாயகத்திற்கும் சூர்யா சிவாவிற்கும் மோதல் போக்கு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக சூர்யா சிவா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

பாஜக ஏஜெண்டாக, எடுபுடியாக செயல்படும் ஆளுநர்..! ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- வைகோ ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!