பாஜக ஏஜெண்டாக, எடுபுடியாக செயல்படும் ஆளுநர்..! ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- வைகோ ஆவேசம்

Published : Dec 06, 2022, 11:47 AM IST
பாஜக ஏஜெண்டாக, எடுபுடியாக செயல்படும் ஆளுநர்..! ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்-  வைகோ ஆவேசம்

சுருக்கம்

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பாரதிய ஜனதா கட்சியின்  ஏஜென்டாக,எடுபுடியாக, தூதுவராக செயல்பட்டு வருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்  

ஆர்.என்.ரவியை திரும்ப பெறுக

சட்ட மேதை அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவிற்கு அரசியல் சட்டத்தை கொடுத்த மாமேதை அம்பேத்கர் என்றும், அவர் என்ன வழியில் சாசனத்தை கொடுத்தாரோ அதை சீரழிக்கும் விதமாக தனக்கு இல்லாத அதிகாரத்தை  தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என்.ரவி பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தவ அவர்,  மத்திய அரசு உடனே ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்..! அதிர்ச்சியில் அதிமுகவினர்..

திமுக கூட்டணி வலுவாக உள்ளது

ஆளுநர் ஆர் என் ரவி பாரதிய ஜனதா கட்சியின் ஏஜென்டாக,எடுபுடியாக, தூதுவராக செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற இருப்பதாக கருத்து கபணிப்பு வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், குஜராத் தேர்தல் மற்ற மாநிலங்களில் பாஜகவின் வெற்றி மற்ற மாநிலங்களில் பிரதிபலிக்காது என தெரிவித்தார்.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

முதலமைச்சரானதுக்கு பின் முதல் முறையாக ரயில் பயணம்..! பொதிகை ரயிலில் தென்காசிக்கு செல்லும் ஸ்டாலின்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!